பரதநாட்டியத்தின் ஆழத்தைக் கொண்டாடும் ‘ப்ரோவோக் கலை விழா 2025’ – சென்னையில் நவம்பர் 1, 2 தேதிகளில்!
சென்னையின் கலாசார மேடையில் மீண்டும் ஒளிரவுள்ளது ப்ரோவோக் கலை விழா 2025. 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விழா, பாரதநாட்டியத்தின் வெளிப்பாட்டு ஆழத்தையும், கர்நாடக இசையின் காலத்தால் அழியாத பாரம்பரியத்தையும் கொண்டாடி வருகிறது.
இவ்வாண்டின் விழா பாரம்பரியம் மற்றும் புதுமை இணையும் அரிய கலைவிழாவாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நவம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் இந்த விழா நடைபெற உள்ளது.
இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ஊக்குவிப்பதன் மூலம், ப்ரோவோக் கலை விழா தென்னிந்தியாவின் கலாசார தலைநகராக சென்னையின் நற்பெயரை மேலும் வலுப்படுத்துகிறது.
கலை, இசை, நடனம் மற்றும் நாடகம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் பல பிரபல கலைஞர்கள் மற்றும் கௌரவ பிரமுகர்கள் இவ்விழாவில் விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படவுள்ளனர்.
விழா அனைவருக்கும் திறந்தது. நுழைவுக் கட்டணம் எதுவும் இல்லை. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நிகழ்ச்சி விவரம்
இடம்: தி மியூசிக் அகாடமி, ராயப்பேட்டை, சென்னை
தேதி: நவம்பர் 1 மற்றும் 2, 2025
ஏற்பாடு: WPS அலுவலகம்
நுழைவு: இலவசம்
பாரம்பரியத்தின் பெருமையும், கலைவுலகின் புதுமையும் இணையும் இந்த “ப்ரோவோக் கலை விழா 2025”-ஐ நேரில் கண்டு களியுங்கள். பரதநாட்டியத்தின் உன்னத உணர்வுகளால் சென்னையின் கலாசார மேடை பிரகாசிக்கவுள்ளது.


