ponniyin-selvan-new-character-poster details
கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நாவலான பொன்னியின் செல்வன் கதைக்களத்தை அதே தலைப்போடு பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்தினம். மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை கொண்டுள்ள இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரையரங்கில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், ஜெயராம், பிரபு, ரகுமான், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, நிழல்கள் ரவி, சரத்குமார், ஷோபிதா, பிரகாஷ்ராஜ் உள்பட பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். மாபெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது.
அண்மையில் இப்படத்தில் போஸ்டர் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாக்கப்பட்டுள்ள இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 6ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவலை புதிய போஸ்டருடன் லைக்கா நிறுவனம் தெரிவு திருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் “காற்றைப் போல் மென்மையானது கடல் போல் வலிமையானது” என குறிப்பிட்டு நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த புதிய போஸ்டரின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஜோதிகா, தனது 47 வயதில் முதல்முறையாக ‘புல்-அப்ஸ்’ செய்து அசத்தியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக…
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொடர்ந்து…
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், பவானிஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’…
‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஒன்…
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்த பழம்பெரும் நடிகை…
FLAG Trailer | SP.Ponshankar | V.Vairaprakash | Rajaravivarma & Balasubramanian.G