Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிசாசு 2 திரைப்படம் ரிலீஸ் தேதி மாற்றம் காரணம் என்ன.?

pisasu2 movie latest update

‘பிசாசு’ படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் தற்போது இயக்கியிருக்கும் படம் தான் “பிசாசு 2”. இதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார். அவருடன் இணைந்து விஜய் சேதுபதி, பூர்ணா, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார்.

இப்படம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திரைக்கு வரும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது இப்படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகாது என்ற தகவல் கிடைத்துள்ளது.

ஏனெனில் இப்படம் ரிலீஸ் ஆக இன்னும் எட்டு நாட்களே உள்ள நிலையில் இப்படத்திற்கான இசை வெளியீடு மற்றும் ட்ரெய்லர் வெளியீடு போன்ற எந்த ப்ரோமோஷன் பணிகளும் இதுவரை தொடங்கப்படவில்லை என்பதால் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

pisasu2 movie latest update
pisasu2 movie latest update