தமிழில் ‘அமர காவியம்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ். அதனைத் தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’, ‘வெற்றிவேல்’, ‘ஒரு நாள் கூத்து’, ‘ரம்’, ‘எமன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரம் நடித்து வரும் ‘கோப்ரா’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தமிழில் அறிமுகமாகும் முன்பே மலையாளத்தில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் மியா ஜார்ஜ். தற்போது இவருக்கு வீட்டில் திருமணம் முடிவு செய்துள்ளனர்.
கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் அஸ்வின் பிலிப் என்பவரை திருமணம் செய்யவுள்ளார் மியா ஜார்ஜ். இருவருடைய நிச்சயதார்த்தம் மற்றும் திருமணத் தேதி இன்னும் முடிவாகவில்லை. செப்டம்பரில் திருமணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் திருமணம் குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்று அஸ்வின் பிலிப் – மியா ஜார்ஜ் குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர்.
அஸ்வின் பிலிப் வீட்டில் நடைபெற்ற சின்ன நிகழ்ச்சியில் மியா ஜார்ஜ் குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ளனர். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் மியா ஜார்ஜுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…