Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மக்​களைத் தவறாக வழி நடத்துவதா? – ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை

Misguiding the people? - Rakul Preet Singh warns

மக்​களைத் தவறாக வழி நடத்துவதா? – ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை

நடிகை ரகுல் ப்ரீத் சிங் அழகுக்காக அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதாக தகவல் பரவி வருகிறது. இது பற்றிய விவரம் பார்ப்போம்..

தமிழ்த்திரையை தொடர்ந்து தெலுங்​கு, இந்​திப் படங்​களிலும் நடித்து வரு​கிறார், ரகுல் ப்ரீத் சிங். இவர் தனது உடலில் சில இடங்​களில் பிளாஸ்​டிக் சர்​ஜரி செய்துள்​ள​தாக டாக்​டர் பிர​சாந்த் என்பவர், சில நாட்களுக்கு முன் வெளி​யிட்ட வீடியோவில் தெரிவித்திருந்​தார். அதில், ரகுல் ப்ரீத் சிங்கின் தற்​போதைய மற்​றும் முந்​தைய புகைப் ​படங்​களை வெளியிட்​டுள்​ளார்.

கன்​னம், தாடையை மேம்​படுத்த ரகுல் பிளாஸ்​டிக் சர்​ஜரி மற்றும் ஃபில்​லர்​களைப் பயன்​படுத்தியதாக​வும் மூக்கு அறுவை சிகிச்சையை​ செய்​து​கொண்டதாகவும் தெரிவித்​திருந்​தார். இந்நிலை​யில், அந்த மருத்​து​வரை ரகுல் ப்ரீத் சிங் கடுமை​யாக விமர்சித்து தனது இன்ஸ்​டாகி​ராம் ஸ்டோரி​யில் பதிவு ஒன்றை வெளி​யிட்​டு உள்​ளார்.

அதில், ‘மோசடி எச்சரிக்கை: இவரைப் போன்​றவர்​கள் தங்களை மருத்​து​வர்கள் என்று கூறிக்​கொண்டு எந்த ஆதாரமும் இல்​லாமல் அறிக்​கைகளை வெளி​யிடு​வதும் மக்​களைத் தவறாக வழிநடத்துவதும் அச்சத்தைத் தரு​கிறது. பழங்​கால மற்​றும் நவீன அறிவியலைப் புரிந்​து​கொண்ட ஒரு நடிகை​யாக இருக்கிறேன்.

மக்​கள் அறுவை சிகிச்​சைகள் செய்​தால் அதில் எனக்கு எந்​தப் பிரச்​சினை​யும் இல்​லை. ஆனால், கடின உழைப்​பின் மூலம் எடையைக் குறைக்க முடி​யும் என்ற மற்​றொரு விஷய​மும் இருக்கிறது. அதைப் பற்றி எப்​போ​தாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’ என கேட்​டுள்​ளார்.

Misguiding the people? - Rakul Preet Singh warns
Misguiding the people? – Rakul Preet Singh warns