இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது. தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் மணிரத்னமே தயாரிக்கும் இப்படத்தில், முதன்முறையாக விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்கின்றனர்.
படத்தின் முக்கியமான காட்சிகள் கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஹவுரா பாலத்தில் நள்ளிரவு நேரங்களில் படமாக்கப்பட்டு வருகின்றன. படப்பிடிப்பு தளத்தில் மணிரத்னம் காட்சிகளை விளக்கும் புகைப்படங்களும், விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்கும் காட்சிகளும் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இப்படத்திற்கு மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். மணிரத்னம் – ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. படத்திற்கான சில புதிய பாடல்களை ஏ.ஆர். ரஹ்மான் ஏற்கனவே கம்போஸ் செய்துள்ளதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மணிரத்னம், விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி என வலுவான கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

