‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஹலோ டியர்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகும் இப்படம், நவீன மெட்ரோ நகரப் பின்னணியில் இளைஞர்களின் வாழ்க்கை முறை மற்றும் அவர்களின் பார்வையை மையமாகக் கொண்டு உருவாகிறது. சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அறிமுக இயக்குநர் டினோய் பாலோஸ் இயக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்த் இசையமைக்கிறார். தற்போது படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
‘பிரேமலு’ படத்தில் மமிதா பைஜு ‘ரீனு’ கதாபாத்திரத்திலும், சங்கீத் பிரதாப் ‘அமல் டேவிஸ்’ கதாபாத்திரத்திலும் இணைந்து ரசிகர்களை கவர்ந்திருந்தனர். அந்தக் கூட்டணி தற்போது ‘ஹலோ டியர்’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளதால், இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
‘பிரேமலு’ வெற்றியைத் தொடர்ந்து தமிழில் மமிதா பைஜு நடித்த ‘டியூட்’ திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் விஜய்யின் ‘ஜன நாயகன்’, சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
View this post on Instagram

