Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இறுதி கட்டத்தை நெருங்கும் பாரதி கண்ணம்மா. அடுத்து நடக்கப் போவது என்ன தெரியுமா?

leaked-details-of-bharathi-kannamma-climax update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வெண்பா பாரதியை திருமணம் செய்ய முடியாத விரக்தியில் இனி இந்த குழந்தை எதுக்கு என்ன ரோஹித்தின் குழந்தையை அபார்ட் செய்து விட்டாள்.

இன்னொரு பக்கம் இன்றைய எபிசோடில் ஹேமா நான் ஒரு அனாதை அனாதை ஆசிரமத்தில் தானே இருக்கணும் என கண்ணம்மாவிடம் சொல்ல அவள் நீ ஒன்னும் அனாதை கிடையாது நான் தான் உன்னுடைய அம்மா என்ற உண்மைகளை போட்டு உடைக்க பாரதி உட்பட எல்லோரும் அதிர்ச்சியில் உறைகின்றனர்.

இதனைத் தொடர்ந்து பாரதி எடுத்த dna டெஸ்ட் ரிசல்ட் இரண்டு குழந்தைக்கும் அப்பா அவர்தான் என தெரிய வர கண்ணம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு அவளுடன் சேர்ந்து வாழ முடிவெடுப்பதாக சொல்லப்படுகிறது. முதலில் பாரதி மீது விரட்டியில் இருக்கும் ஹேமா மற்றும் லட்சுமியை குடும்பத்தார் இருவரும் பாரதியை ஏற்றுக் கொள்ள உள்ளனராம்.

ஆனால் பாரதி கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ்வது பிடிக்காத வெண்பா அவனை பழிவாங்க முடிவெடுக்கிறாள். இப்படியாக பாரதி கண்ணம்மா சீரியல் இரண்டாவது சீசன் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த விஷயத்தை அறிந்த ரசிகர்கள் இதற்கு ஒரு முடிவே இல்லையா என புலம்பி வருகின்றனர்.

 leaked-details-of-bharathi-kannamma-climax update

leaked-details-of-bharathi-kannamma-climax update