டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘டாக்சிக்’ படம் மார்ச் 19-ந்தேதி ரிலீஸாகும் என்று அறிவித்திருந்தார்கள். யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘டாக்சிக்’ படத்தை விஜய்யின் ஜனநாயகன் படத்தை தயாரித்த கே.வி.என். ப்ரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது.

இந்நிலையில் டாக்சிக் பட ரிலீஸை தள்ளிப் போட்டிருப்பதாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது கே.வி.என். ப்ரொடக்சன்ஸ். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

‘உலக ரசிகர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட படம் டாக்சிக். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டிருக்கும் டாக்சிக் படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டது. ஆண்டுக்கணக்கில் வேலை செய்த நிலையில் மார்ச் 19-ந்தேதி எங்கள் படம் ரிலீஸாகும் என்று சந்தோஷமாக இருந்தோம்.

ஆனால், தற்போது மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் சூழல் காரணமாக, எங்களால் உலக ரசிகர்கள் அனைவரையும் சென்றடைய முடியாமல் ஆகியிருக்கிறது. அதனால் எங்களின் பார்ட்னர்கள், ரசிகர்களை மனதில் வைத்து ரிலீஸை தள்ளிப் போடுவது என்கிற கடினமான முடிவை எடுத்திருக்கிறோம். உங்களின் புரிதலுக்கும், பொறுமைக்கும் நன்றி. உங்களின் தொடர் அன்பு, ஆதரவை எதிர்பார்க்கிறோம்.

டாக்சிக் படம் ஜூன் 4-ந்தேதி ஆங்கிலம் மற்றும் அனைத்து இந்திய மொழிகளிலும் ரிலீஸாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கும் டாக்சிக் பட ரிலீஸை தள்ளிப் போடுவதற்கும் என்ன தொடர்பு என்று புரியவில்லை. முதலில் ஜனநாயகன் ரிலீஸை தள்ளிப் போட்டீர்கள் தற்போது டாக்சிக் படத்தின் புது ரிலீஸ் தேதியையாவது வெளியிட்டுள்ளீர்கள். ஆனால், விஜய் படம் எப்பொழுது திரைக்கு வரும் என்றே இன்னும் அறிவிக்கவில்லை. ஜனநாயகன் ரிலீஸ் தேதி தெரிந்தாக வேண்டும் என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

KVN production company to release the film on Toxic’s release date.. Official announcement!

 

dinesh kumar

Recent Posts

Alaakaa Loova Lyrical Video

Alaakaa Loova Lyrical Video (Tamil) | OM | Dhanush | Mammootty | Sai Pallavi |…

2 hours ago

Kaadana Kaadu Lyrical Video

Kaadana Kaadu Lyrical Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika | Riythvika…

2 hours ago

Mittai Mazhai Lyrical Video

Mittai Mazhai Lyrical Video | AOT | Dulquer Salmaan | Satvika | GV Prakash |…

2 hours ago

Street Fighter Official Tamil Trailer

Street Fighter Official Tamil Trailer | In Cinemas October 16

2 hours ago

Vaane Vaane Lyrical Video

Vaane Vaane Lyrical Video | Sri Sri (Tamil) | Dulquer Salmaan | Pooja Hegde |…

1 day ago

Kalangathey Lyrical Video

Kalangathey Lyrical Video | Magudam (Tamil) | Vishal | Anjali | Dushara | GV Prakash

1 day ago