kiyara advani marriage details
கவர்ச்சி நடிகையான கியாரா அத்வானியும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலித்து வருகிறார்கள். இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இருவருக்கிடையே காதல் முறிவு ஏற்பட்டதாகவும், இருவரும் பிரிந்து விட்டதாகவும் அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக கியாரா அத்வானியின் பிறந்தநாளை, அவரது காதலர் சித்தார்த் மல்ஹோத்ரா ஆடம்பரமாக கொண்டாடி இருக்கிறார்.
துபாயில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தனது காதலியின் பிறந்தநாளை, அவர் வியக்கும் அளவு பிரமாண்டமாக கொண்டாடி பிரமிப்பூட்டி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வாழ்த்துகளை பெற்று வருகிறது. காதலர்களான இருவரும் திருமண வாழ்க்கையில் விரைவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருவீட்டாரும் திருமண பேச்சை தொடங்கி விட்டதாகவும், விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது கியாரா அத்வானி, ராம் சரண் ஜோடியாக ஷங்கர் இயக்கி வரும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘மாவீரன்’ படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…