Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜனநாயகன் படம் ரீமேக்கா?” என்ற கேள்விக்கு ‘பகவந்த் கேசரி’ இயக்குநர் அனில் ரவிபுடி பதில்

"Is Janyayan a remake?" answers 'Bhagavant Kesari' director Anil Ravipudi

ஜனநாயகன் படம் ரீமேக்கா?” என்ற கேள்விக்கு ‘பகவந்த் கேசரி’ இயக்குநர் அனில் ரவிபுடி பதில்

விஜய்யின் கடைசிப்படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். படத்தில் விஜய்யுடன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, நரேன், கவுதம் மேனன் உள்பட பலர் நடித்துள்ளார். இப்படம் ஜனவரி 9-ந்தேதி வெளியாகவுள்ளது.

அண்மையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 75 ஆயிரம் பேர் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், இந்தப் படம் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த ’பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்று தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், பாலகிருஷ்ணா , ஸ்ரீலீலா மற்றும் காஜல் அகர்வால் நடித்த ’பகவந்த் கேசரி’ படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடி ‘ஜனநாயகன்’ தனது படத்தின் ரீமேக் என்ற வதந்திகளுக்கு பதிலளித்துள்ளார். அவர் தெரிவிக்கையில், ’

‘ஜனநாயகன்’ திரைப்படம் தளபதி விஜய்யின் படம். நான் விஜய் சாரை இரண்டு முறை சந்தித்திருக்கிறேன். விஜய் சார் ஒரு உண்மையான ஜென்டில்மேன். ஜனநாயகன் படத்தில் எனக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா? இல்லையா? என்பது படம் வெளியான பிறகுதான் தெரியும்’ என கூறியுள்ளார்.

"Is Janyayan a remake?" answers 'Bhagavant Kesari' director Anil Ravipudi
“Is Janyayan a remake?” answers ‘Bhagavant Kesari’ director Anil Ravipudi