தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாகும் என்று பட குழுவினர் அறிவித்து இருந்தனர்.
ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் வெளியாகவில்லை. படக்குழு மேல்முறையீடு செய்தும் எந்த ஒரு முடிவும் கிடைக்காததால் தற்போது ரிலீஸ் தேதியை தேடி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.
இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்த நிலையில் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் பிரபல நிறுவனமான புக் மை ஷோ ஜனநாயகன் திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருப்பதாகவும் அதே போல் இந்த பதிவை பார்த்த ப்ளூ சட்டை மாறன் அவரது எக்ஸ்த்தல பக்கத்தில் எது டிசம்பர் 2026 அந்த டைம்ல தளபதி ஆட்சி ஆறு மாசமே முடிந்திருக்குமே என்று பதிவிட்டு உள்ளார்.
இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


