இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் பான்-இந்திய திரைப்படம் ‘இம்மார்டல்’. இப்படத்தின் 2-வது சிங்கிளான ‘She Is My’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.
மாரியப்பன் சின்னா எழுதி இயக்கும் இப்படத்தில், ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தின் ‘She Is My’ பாடல் மெலடி ரகத்தில் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
அருண்குமார் தனசேகரன் பிரம்மாண்டமாக தயாரிக்கும் ‘இம்மார்டல்’ திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ‘She Is My’ 2-வது சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இதற்கான போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

