farah khan infected with the vaccinated corona
இந்தி திரையுலக பிரபல பெண் இயக்குனர் பராகான். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். இதற்கான படப்பிடிப்பில் பராகான் கலந்து கொண்டார். அவரோடு படப்பிடிப்பில் இன்னொரு நடுவராக இருக்கும் நடிகை ஷில்பா ஷெட்டியும் பங்கேற்றார்.
இந்த நிலையில் பராகானுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 2 தடுப்பூசிகள் போட்ட பிறகும் அவருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து பராகான் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் இரண்டு தடவை கொரோனா தடுப்பூசி போட்டு இருக்கிறேன். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுடன் தான் பணியாற்றினேன். ஆனாலும் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். விரைவில் குணமடைந்து விடுவேன்’’ என்று கூறி உள்ளார்.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…