விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ்

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ்

நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, தணிக்கை சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழக்கு நடைபெற்று வருவது தெரிந்ததே.

இந்த சூழலில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ், தணிக்கை வாரியத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான சிக்கலைத் தீர்க்க, தணிக்கை வாரியத்தின் சீராய்வு குழுவின் பார்வைக்கு அனுப்பவும் படக்குழு தீர்மானித்துள்ளது.

தணிக்கை வாரியத்தின் ஆய்வுக் குழு பரிந்துரைத்த 27 மாற்றங்களைச் செய்த பிறகும் சான்றிதழ் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை படக்குழு சட்டப் போராட்டம் நடத்தியது.

இருப்பினும், சட்ட ரீதியான நடவடிக்கைகளில் உடனடி தீர்வு கிடைக்காததாலும், படத்தின் ஓடிடி உரிமத்தைப் பெற்றுள்ள அமேசான் ப்ரைம் நிறுவனத்தின் அழுத்தம் காரணமாகவும் இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால், நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பே படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தால், அரசியல் வசனங்கள் நிறைந்த இந்தப் படம் தேர்தல் ஆணையத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

தற்போது சீராய்வு குழு இந்தப் படத்துக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில், வரும் பிப்ரவரி 20-ந்தேதி ‘ஜனநாயகன்’ படத்தை வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்னதாக வெளியாகும் இப்படம், அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, தவெகவுக்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Do you know when Vijay’s ‘Jananayagan’ will be released? Good news for fans soon
dinesh kumar

Recent Posts

டி.சி திரைப்பட விமர்சனம்

தேவதாஸ், சந்திரா ஆகிய பெயர்களின் சுருக்கமே ‘டி.சி’. கேங்ஸ்டராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசாரின்…

15 hours ago

டேர் டெவில் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ரூ.180 கோடி வியாபாரமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், நடிப்புடன் கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன்…

16 hours ago

இளம் கிரிக்கெட் வீரருடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாகூர்!

‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர், இந்திய இளம் கிரிக்கெட் வீரர்…

16 hours ago

சம்பளம் மட்டுமல்ல… செல்வாக்கிலும் கெத்து! இந்தியாவின் டாப் 10 நடிகைகள்!

திரையுலக நட்சத்திரங்களின் சம்பளம், சொத்து மதிப்பு, பிராண்ட் மதிப்பு, ஆடம்பர வாழ்க்கை முறை உள்ளிட்டவை குறித்து ரசிகர்கள் மத்தியில் எப்போதும்…

16 hours ago

மகேஷ் பாபு பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘வாரணாசி’ படத்தின் ‘ருத்ரா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும்…

16 hours ago

சென்னையில் கார் விபத்தில் சிக்கிய ஏ.ஆர். ரஹ்மான் மகன் அமீன்!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன் சென்னையில் நடந்த கார் விபத்தில் சிக்கியுள்ளார். இன்று அதிகாலை, கோயம்பேட்டில் இருந்து…

16 hours ago