கேவலமான கேள்வியை யாரிடமும் கேட்காதீங்க… வரலட்சுமி காட்டம்

தமிழ் சினிமாவில் பல படங்களில் ஒப்பந்தம் ஆகி பிசியாக நடித்து வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் தன்னுடைய பிறந்தநாளை சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைகளுக்கு, பொம்மை, சாக்லேட், கேக், போன்றவற்றை வழங்கி கொண்டாடினார்.

அதன்பின் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் எப்போது உங்களது திருமணம் என்ற கேள்வியை எழுப்பினார். இந்த கேள்விக்கு சட்டென்று கோபமான வரலட்சுமி, திருமணம் எப்போது என்ற கேவலமான கேள்வியை யாரிடமும் கேட்க வேண்டாம் என காட்டமாக தெரிவித்தார்.

மேலும் திருமணம் என்பது பெண்களுக்கு அவசியமான ஒன்றா? அது ஒரு கொள்கையா என்றும், பெண்கள் என்றால் திருமணம் செய்ய வேண்டும் என்று ஏதாவது உள்ளதா? பின்னர் ஏன் இப்படி ஒரு கேள்வியை தொடர்ந்து எழுப்பி வருகின்றீர்கள். ஆண்களுக்கு சில கொள்கைகள் இருக்கும் போது பெண்களுக்கு மட்டும் கொள்கைகள் இருக்கக் கூடாதா? என்றும் கல்யாணம் எப்போது என்கிற கேவலமான கேள்வியை மட்டும் யாரிடமும் கேட்காதீர்கள் என வரலட்சுமி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Suresh

Recent Posts

அர்ஜூனின் ப்ளாஸ்ட் திரைவிமர்சனம்

கராத்தே மாஸ்டராக இருக்கும் அர்ஜுன், தனது மகள் ப்ரீத்தி முகுந்தனை சிறு வயதிலிருந்தே தைரியமான பெண்ணாக வளர்க்கிறார். “ஒரு பெண்…

11 hours ago

நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது தனுஷின் “கர”!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கிரைம் த்ரில்லர் திரைப்படமான “கர”, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே…

11 hours ago

கருப்பு படம் பார்த்த ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான “கருப்பு” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக…

11 hours ago

‘ப்ளாஸ்ட்’ முதல் நாள் வசூல் இவ்வளவா?

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்துள்ள‘ப்ளாஸ்ட்’ (Blast) திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.…

11 hours ago

ஆகஸ்ட் 14ல் வெளியாகும் “விஸ்வநாத் & சன்ஸ்”!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தற்போது தொடர்ச்சியாக வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆர்.ஜே. பாலாஜி…

11 hours ago

ஜேசன் சஞ்சய் இயக்கிய “சிக்மா” ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள “சிக்மா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில்…

12 hours ago