Blast First Day Collection Revealed
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்துள்ள‘ப்ளாஸ்ட்’ (Blast) திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் அர்ஜுனுடன் அபிராமி மற்றும் பிரீத்தி முகுந்தன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய ஆக்ஷன் மற்றும் உணர்வுகள் கலந்த படமாக “ப்ளாஸ்ட்” உருவாகியுள்ளது.
இந்த படத்தை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநரான சுபாஷ் கே. ராஜ் இயக்கியுள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு, ‘KGF’ புகழ் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். இதன் மூலம் அவர் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.
இந்நிலையில், “ப்ளாஸ்ட்” திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இப்படம், வசூலிலும் நல்ல தொடக்கத்தை பெற்றுள்ளது.
அதன்படி, “ப்ளாஸ்ட்” திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ.1.15 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…