Vignesh Shivan’s Special Birthday Surprise for Actress Nayanthara
தென்னிந்தியத் திரையுலகின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா, தனது 42-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக அவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
குறிப்பாக, நடிகை திரிஷா மற்றும் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் வெளியிட்ட பிறந்தநாள் வாழ்த்துப் பதிவுகள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன.
நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நயன்தாராவுடன் கடற்கரையில் நின்றபடி சூரிய அஸ்தமனத்தை ரசிக்கும் அழகான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதனுடன், “எதிர்காலத்திலும் இதுபோன்று இன்னும் பல சூரிய அஸ்தமனங்களை நாம் இருவரும் இணைந்து ரசிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டு தனது அன்பையும் நட்பையும் வெளிப்படுத்தியுள்ளார். இருவரும் திரையுலகில் போட்டியாளர்களாகப் பார்க்கப்பட்டாலும், அவர்களுக்கிடையேயான நட்பை வெளிப்படுத்தும் இந்தப் பதிவு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
மறுபுறம், நயன்தாராவின் கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன், தனது மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு வீட்டை அழகாக அலங்கரித்து சிறப்பான சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இருவரின் திருமணத் தருணங்கள், சுற்றுலாப் பயணங்கள் மற்றும் மகன்களான உயிர், உலக் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட குடும்பப் புகைப்படங்களை வீட்டின் சுவர்களில் அலங்கரித்து, அதுதொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
‘நானும் ரௌடி தான்’ படத்தின் ‘நீயும் நானும் அன்பே’ பாடல் பின்னணியில் ஒலிக்க வெளியான அந்த வீடியோவில், “மறுபடி பிறந்தாலும்… நீயே வேணும்… லவ் யூ என் உயிரே, உலகமே, என் தங்கமே… இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என விக்னேஷ் சிவன் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து பல திரைப்பிரபலங்களும், நயன்தாரா நடித்து வரும் புதிய படங்களின் தயாரிப்பு நிறுவனங்களும் பிரத்யேக போஸ்டர்களை வெளியிட்டு அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளன.
Sokka Vachaale Video Song | Thagappan | Jiiva | Rajisha | Marshall Robinson | Ra.Venkat…
இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘சத்தியவான்…
நடிகர் ரஜினிகாந்த் நேற்று பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவரைச் சூழ்ந்த…
நடிகை ரம்யா கிருஷ்ணனும், அவரது கணவரும் இயக்குநருமான வம்சியும் பிரிந்துவிட்டதாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இருவரும்…
சமீபத்தில் நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அன்ஜனாவின் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் அர்ஜுனின் மூத்த மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவின்…
ARIVU Official Tamil Teaser | Uriyadi Vijayakumar | Kayal Anandhi | Sathyasiva | D.Imman