Dhanush’s “Kara” Now Streaming on Netflix
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கிரைம் த்ரில்லர் திரைப்படமான “கர”, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படம் ஓடிடி ரசிகர்களையும் கவர தயாராகியுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இப்படத்திற்கு ஆல்ஃப்ரட் ராஜா திரைக்கதை எழுதியுள்ளார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில், மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கே.எஸ். ரவிக்குமார், சூரஜ் வெஞ்சரமூடு, ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
1990களின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில், “கரசாமி” என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். கிராமத்தில் வாழும் ஒரு மனிதன், ஜப்தி செய்யப்பட்ட தனது நிலத்தை மீட்க எடுக்கும் போராட்டமே இப்படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது.
திரையரங்குகளில் வெளியாகி ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்த “கர” திரைப்படம், தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று (மே 28) முதல் ஸ்ட்ரீமிங் ஆக தொடங்கியுள்ளது.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியாகியுள்ளது.
கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே கவனம் பெற்றுவரும் நடிகை ஆஷிகா ரங்கநாத், ‘சர்தார் 2’…
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று (செப்.10) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள்…
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.…
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சர்தார் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக…
ராமநாதபுரத்தில் காலம் காலமாக கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் பாரம்பரியமான பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள…
Higher Promo Song | An Ordinary Man | Ravi Mohan | Yogi Babu | Keneeshaa…