Jason Sanjay’s Directorial “Sigma” Release Date Announced
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள “சிக்மா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளதுடன், அவருக்கு ஜோடியாக பரியா அப்துல்லா நடித்துள்ளார். மேலும் ராஜு சுந்தரம், அன்புதாசன், யோகி ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை, ஜேசன் சஞ்சயின் JSK மீடியா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், இசை வெளியீடு மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.
இந்நிலையில், “சிக்மா” திரைப்படம் வரும் ஜூலை 31ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டருடன் அறிவித்துள்ளது.
A high-stakes heist begins. 💵 #SIGMA storms into theatres on July 31st. 🗓️ Gear up for the ultimate quest. 🔥@official_jsj @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @jsjmedia01 @sundeepkishan @MusicThaman @fariaabdullah2 #RajuSundaram #SampathRaj @shivpanditt @follow_anbu… pic.twitter.com/Sd87kylWZN
— Lyca Productions (@LycaProductions) May 29, 2026
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…
‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…