சர்வதேச எம்மி விருதுகள் விழாவில் விருது வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி

ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுகளுக்கு இணையாகக் கருதப்படும் முக்கியமான விருதுகளில் எம்மி விருதுகளும் ஒன்றாகும். கடந்த 1949-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வரும் இவ்விருதுகள், உலகம் முழுவதும் தொலைக்காட்சித் துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் மற்றும் படைப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், 54-வது சர்வதேச எம்மி விருதுகள் வழங்கும் விழா இன்று நியூயார்க் நகரில் நடைபெற்றது. சர்வதேச தொலைக்காட்சித் துறையில் சிறந்து விளங்கிய கலைஞர்கள் மற்றும் படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில் மொத்தம் 16 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

இதில், சிறந்த நாடகத் தொடருக்கான விருது பிரெஞ்சு வரலாற்றுத் தொடரான ‘கரேம்’ (Careme) படைப்புக்கு வழங்கப்பட்டது. சிறந்த நகைச்சுவைத் தொடருக்கான விருதை ‘டிவிசியோன் பலேர்மோ – சீசன் 2’ (Community Squad) வென்றது.

சிறந்த நடிகருக்கான விருது ‘அன்பர்கிவபிள்’ (Unforgivable) திரைப்படத்தில் நடித்த பாபி ஸ்கோஃபீல்டுக்கும், சிறந்த நடிகைக்கான விருது ‘ஹோலி ஷிட்’ (Holy Shit) திரைப்படத்தில் நடித்த மோனா மினா லியோனுக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த தொலைக்காட்சித் திரைப்படம் அல்லது குறுந்தொடருக்கான விருதை ‘கைதி 951’ (Prisoner 951) தொடர் பெற்றது. சிறந்த ஆவணப்படத்திற்கான விருது ‘லூயிஸ் தெரூக்ஸ்: த செட்லர்ஸ்’ படைப்புக்கு வழங்கப்பட்டது.

நடப்பு நிகழ்வுகள் மற்றும் செய்திப் பிரிவில் ‘எக்ஸ்போசர்: பிரேக்கிங் ரேங்க்ஸ்’, ‘த வேர்ல்ட்: 24 ஹவர்ஸ் இன் த கில் சோன்’ ஆகியவை விருதுகளைப் பெற்றன. திரைக்கதையற்ற நிகழ்ச்சிகள் மற்றும் குறும்பட வடிவப் பிரிவில் ‘எட்சுகேட்டிங் யார்க்ஷயர் சீசன் 2’, ‘த க்ளாஸ் ஆஃப் 2000’ ஆகியவை தேர்வு செய்யப்பட்டன.

மேலும், சிறப்பு மற்றும் சர்வதேசப் பிரிவில் ‘த பிலிப்ஸ்டவுன் வையர்கார் கிராண்ட் பிரிக்ஸ்’, ‘லெய்லா’, ‘காபி + பேஸ்ட் + ஸ்டீல்’ ஆகிய படைப்புகள் அங்கீகரிக்கப்பட்டன. சிறுவர் நிகழ்ச்சிகள் பிரிவில் ‘தி ஸ்கேர்குரோஸ் வெட்டிங்’, ‘ஹாரிபிள் சயின்ஸ்’, ‘டெக்ஸ்டர் பிராக்டர்’ ஆகியவை விருதுகளைப் பெற்றன.

இந்த ஆண்டு சர்வதேச எம்மி விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி விருது வழங்குபவராகக் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Suresh

Recent Posts

Vetta Saami Official Teaser

Vetta Saami Official Teaser | Arulnithi | Ameer | Ghibran | M. Selvakumar | 7MPS…

4 hours ago

Arikomban Official Trailer

Arikomban Official Trailer | Mithun Maheshwaran | Sagishna Xavier

5 hours ago

ஐட்டம் பாடல்கள், பெண்களின் காட்சிப்படுத்தல்.. மனம் திறந்த ஸ்ருதி ஹாசன்!

இந்திய சினிமாவில் பெண்களைப் போகப்பொருளாகச் சித்தரிக்கும் போக்கு இன்னும் தொடர்வதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, பெரிய நட்சத்திரங்களின் படங்களில்…

6 hours ago

அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன் – சோபிதா குறித்து நாக சைதன்யா நெகிழ்ச்சி

நடிகை சோபிதா துலிபாலாவின் துடிப்பான குணம், பாரம்பரியம் மற்றும் நவீன சிந்தனைகளை இணைக்கும் தனித்துவமான ஆளுமை ஆகியவை தன்னை மிகவும்…

6 hours ago

நடிகர் சரத்குமாரின் 177-வது படம் ‘டாக்ஸி’.. டைட்டில் அறிவிப்பு வெளியீடு!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், ‘சுப்ரீம் ஸ்டார்’ என ரசிகர்களால் கொண்டாடப்படுபவருமான சரத்குமாரின் 177-வது திரைப்படத்திற்கு ‘டாக்ஸி’ (Taxi) என…

6 hours ago

ஸ்ருதி ஹாசன் நடிக்கும் புதிய படம்.. இயக்குநர் யார் தெரியுமா?

நவம்பர் 24-ம் தேதி சாந்தி டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஸ்ருதி ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய…

7 hours ago