Dhanush's new achievement in the film industry
தமிழ் சினிமாவில், பன்முகத் திறமையாளராக தன்னை வளர்த்துக் கொண்டவர் தனுஷ். அவர் இயக்குநராக அறிமுகமான ‘ராயன்’ படம் 150 கோடி ரூபாய் வசூலை கடந்தது. தெலுங்கிலும் ‘குபேரா’ படத்தில் நடித்து தனுஷ் சாதனை படைத்தார். சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்த இப்படம் தமிழிலும் வெளியாகி இருந்தாலும், நேரடி தெலுங்கு படமாகும். இப்படத்தில் தன் அசாத்திய நடிப்பு திறனை மேலும் ஒருமுறை நிரூபித்து காட்டியிருந்தார் தனுஷ். அப்படம் தமிழில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்ற போதும் தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரைப் பிரபலங்களும் ‘குபேரா’ படத்தையும் தனுஷின் நடிப்பையும் கொண்டாடினார்கள். ஒட்டுமொத்தமாக ‘குபேரா’ திரைப்படம் 150 கோடிக்கு மேல் வசூலித்தது.
இவ்வாறு ராயன், குபேரா மற்றும் சமீபத்தில் வெளியான தேரே இஷக் மெய்ன் ஆகிய படங்களின் மூலம் 150 கோடி வசூலை பெற்றுள்ளது. அதன் மூலம் டப் செய்யாமல் நேரடியாக அந்தந்த மொழிகளில் வெளியிடப்பட்டு 150 கோடி வசூல் பெற்றது.
அவ்வகையில், வேறெந்த நடிகரும் செய்திடாத ஒரு சாதனையை செய்து காட்டியிருக்கின்றார் தனுஷ். இது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அவர் நடிப்பு திறனுக்கு கிடைத்த மேலும் ஒரு அங்கீகாரமாக இந்நிகழ்வு பேசப்படுகின்றது.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…