“வரைபடத்தில்கூட இல்லாத இடத்தில் படப்பிடிப்பு!” – ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள ‘அருள்வான்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னைவில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், கிருத்திகா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகை ரம்யா பாண்டியன், “சில காலத்திற்கு கிராமத்து கதைகளில் நடிக்க வேண்டாம் என்ற மனநிலையில்தான் இருந்தேன். ஆனால் இயக்குநரின் மீது இருந்த நம்பிக்கையால் இந்தக் கதையை கேட்டேன். முழுக் கதையையும் கேட்ட பிறகு, அதன் மையக் கருத்து மிகவும் பிடித்ததால் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன்” என்றார்.

மேலும், “இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்த இடம் வரைபடத்தில்கூட இல்லாத ஒரு பகுதி. அங்கு தொலைதொடர்பு வசதிகளே இல்லை. தூங்குவதற்கோ, சாப்பிடுவதற்கோ போதுமான வசதிகளும் இல்லை. ஆனால் அந்த இடத்திலும் மக்கள் வாழ்கிறார்கள். அங்கு செல்வது மிகவும் சவாலாக இருந்தாலும், அங்குள்ள மக்களுடன் பழகி, அவர்களுடன் இணைந்து வாழ்ந்த அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது. அந்தப் படப்பிடிப்பு எங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது,” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

Suresh

Recent Posts

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

17 hours ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

17 hours ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

18 hours ago

சிவகார்த்திகேயனின் 27-வது படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…

18 hours ago

Delivery Boy Official Trailer

Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS

2 days ago

Dheeram Dheeram Lyrical Video

Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…

2 days ago