பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதி!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1931-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி பிறந்த சௌகார் ஜானகி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், 300-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

தெலுங்கில் வெளியான ‘ஷவுகாரு’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவருக்கு, அந்தப் படத்தின் பெயரே பின்னர் ‘சௌகார்’ என்ற அடைமொழியாக மாறியது. 1952-ஆம் ஆண்டு வெளியான ‘வளையாபதி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

கன்னடத்தில் 1959-ஆம் ஆண்டு வெளியான ‘மகிஷாசுர மர்தினி’ திரைப்படத்தில் டாக்டர் ராஜ்குமாருடன் நடித்த சௌகார் ஜானகி, தென்னிந்திய திரையுலகின் முக்கியமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார்.

கலைத்துறையில் இவரது நீண்டகாலப் பங்களிப்பைப் பாராட்டி நந்தி விருதுகள், கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதையும் சௌகார் ஜானகி பெற்றுள்ளார்.

Suresh

Recent Posts

47 வயதில் முதல் ‘புல்-அப்ஸ்’ செய்து அசத்திய நடிகை ஜோதிகா!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஜோதிகா, தனது 47 வயதில் முதல்முறையாக ‘புல்-அப்ஸ்’ செய்து அசத்தியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக…

29 minutes ago

“ஐட்டம் பாடல்களுக்கு மட்டுமே என்னை அணுகுகிறார்கள்!” – தமன்னா வேதனை

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொடர்ந்து…

35 minutes ago

“இந்தக் காலத்தில் ஒரு நிமிடத்திற்குமேல் யாரிடமும் பேச முடியவில்லை!” – ராதிகா சரத்குமார்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், பவானிஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’…

39 minutes ago

“சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள்… அவர்கள் வாழட்டும்; ஆனால் எங்களையும் வாழ விடுங்கள்!” – மன்சூர் அலிகான்

‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஒன்…

44 minutes ago

FLAG Trailer

FLAG Trailer | SP.Ponshankar | V.Vairaprakash | Rajaravivarma & Balasubramanian.G

2 days ago

குழந்தையின் மொட்டை விழா.. மீண்டும் ஒன்றாக தோன்றிய மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா!

பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான தனிப்பட்ட விவகாரம் கடந்த…

2 days ago