கோலிவுட்டில் இசைப் போட்டி சூடுபிடிக்கிறது… அனிருத் Vs சாய் அபயங்கர்!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் வலுவான போட்டியாளராக உருவெடுத்து வருகிறார். ‘கட்சி சேரா’, ‘ஆசா கூட’ போன்ற ஆல்பம் பாடல்கள் மூலம் கவனம் ஈர்த்த சாய் அபயங்கர், தற்போது அடுத்தடுத்த பிரம்மாண்ட திரைப்படங்களில் ஒப்பந்தமாகி கோலிவுட்டின் பேசுபொருளாகியுள்ளார்.

அனிருத்தின் மெகா லைன்-அப்

உச்ச நட்சத்திரங்களின் முதல் தேர்வாக இருக்கும் அனிருத், தற்போது ‘ஜனநாயகன்’, ‘ஜெயிலர் 2’ உள்ளிட்ட முக்கிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதோடு ஷாருக்கான், அல்லு அர்ஜுன், யஷ், நானி ஆகியோரின் மெகா பட்ஜெட் படங்களிலும் பணியாற்றி வருகிறார்.

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்கள், சிலம்பரசன், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களும் அவரது கைவசம் உள்ளன.

சாய் அபயங்கரின் அதிரடி வளர்ச்சி

குறுகிய காலத்திலேயே தனது தனித்துவமான இசை பாணியால் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற சாய் அபயங்கர், தற்போது பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் இசையமைக்கிறார்.

டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா 48, தனுஷின் D55, அட்லீ – அல்லு அர்ஜுன் பான்-இந்தியா படம் ஆகியவை அவரது முக்கியமான திட்டங்களாக உள்ளன.

அதுமட்டுமல்லாமல் கார்த்தியின் ‘மார்ஷல்’, லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸின் ‘பென்ஸ்’, STR 49, துருவ் விக்ரம், விஜய் சேதுபதி – மமிதா பைஜூ கூட்டணிப் படம் உள்ளிட்ட பல படங்களும் அவரது வரிசையில் இடம்பெற்றுள்ளன.

அனுபவமும் வெற்றிகளும் நிறைந்த அனிருத் ஒருபுறம்… புதிய இசை அலையுடன் வேகமாக முன்னேறும் சாய் அபயங்கர் மறுபுறம்… இந்த இசைப் போட்டி கோலிவுட்டின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கும் என ரசிகர்களும், திரையுலக வட்டாரங்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Suresh

Recent Posts

Cottage Teaser

Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar

9 hours ago

Bindaas Lyric Video

Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…

10 hours ago

Yaaridho Video Song

Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…

10 hours ago

Straight Outta Sarpetta Video Song

Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…

1 day ago

Don’t Trouble The Trouble Title Song

Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava

1 day ago

Mozhiye Lyric Video

Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | ‪@SaiAbhyankkar‬ | Sid Sriram | Balaji…

1 day ago