Shruti Haasan Backs Kamal Haasan's AI Warning
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு, அவரது மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், ChatGPT உள்ளிட்ட AI கருவிகளை அளவுக்கு மீறி பயன்படுத்த வேண்டாம் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். AI தளங்களில் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் பின்னால் அதிகளவு மின்சாரமும், சர்வர்களை குளிர்விக்க கணிசமான அளவு தண்ணீரும் பயன்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
“தேவையான கேள்விகளை மட்டும் AI-யிடம் கேளுங்கள். மற்ற விஷயங்களுக்கு உங்களைச் சுற்றியிருக்கும் மனிதர்களிடம் பேசுங்கள். தொழில்நுட்பத்தைவிட அனுபவமும் அறிவும் கொண்டவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.
கமல்ஹாசனின் இந்தக் கருத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஸ்ருதி ஹாசன், “💯” எமோஜியை பதிவிட்டு தனது முழு ஒப்புதலை வெளிப்படுத்தினார். மேலும், AI பயன்பாட்டால் ஏற்படும் நீர் நுகர்வு தொடர்பான தகவல்களையும், “AI-யை விட மனிதர்களின் திறமைக்கு இன்னும் மதிப்பு கொடுப்பவராக இருந்தால் பின்தொடருங்கள்” என்ற வாசகத்துடன் வீடியோவை பகிர்ந்து, மனித திறமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…