Gautham Karthik's new film; Mariselvaraj opens with 'clap'
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படத்தின் மூலம் கவுதம் கார்த்திக் அறிமுகமாகி, தன் அடுத்தடுத்த படங்களில் மினிமம் பட்ஜெட் நாயகனானார்.
அவ்வகையில் வை ராஜா வை, ரங்கூன், ஆகஸ்ட் 16 ,1947, உள்ளிட்ட படங்கள் இவருக்கு வெற்றிப்படமாகின. இதற்கிடையே, நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்துகொண்டார்.
தற்போது கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘ரூட்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. கணேஷ் கே.பாபு புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு ‘ஜி.ஆர்.கே 19’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டு உள்ளது.
அறிமுக இயக்குநர் தினா ராகவன் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இயக்குநர் மாரி செல்வராஜ் முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து, முழு குழுவினருக்கும் தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்து, முதல் ஷாட் கிளாப் அடித்து படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். அவரது வருகை மற்றும் பாராட்டு, ‘ஜி.ஆர்.கே 19’ குழுவினருக்கு மிகுந்த ஊக்கத்தை சேர்த்தது. படப்பிடிப்பு தளத்திற்கு வந்து தங்களை வாழ்த்தியதற்கு இயக்குநர் மாரி செல்வராஜுக்கு படக்குழுவினர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…
Immortal Official Trailer | GV Prakash | Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna…
Operation Tral Official Teaser Tamil | Jayasurya | Ritika Singh | Ratheesh Vega | Joby…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை…
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.…