Categories: Movie Reviews

ஹாய் திரைவிமர்சனம்

பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண் பார்க்கத் தொடங்குகிறார்கள். காதல் திருமணத்தின் மீது உறுதியாக இருக்கும் கவின், வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

மறுபுறம், திருமண வாழ்க்கைக்குள் சிக்கிக்கொள்ளாமல் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் நயன்தாராவுக்கும் வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. இதனால் அவரும் வீட்டை விட்டு சென்னைக்கு வருகிறார். சென்னையில் எதிர்பாராத விதமாக இருவரும் சந்தித்து நண்பர்களாகப் பழகத் தொடங்குகின்றனர்.

நயன்தாரா மீது கவினுக்கு காதல் மலர்கிறது. ஆனால், காதல் மற்றும் திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாத நயன்தாராவிடம் தனது காதலை வெளிப்படுத்தாமல், ஒருதலைக்காதலுடன் அவரைப் பின்தொடர்கிறார் கவின்.

இந்நிலையில், எதிர்பாராத சூழலில் இருவரும் கணவன்–மனைவியாக நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி நயன்தாராவின் மனதை மாற்றி, தனது காதலை ஏற்றுக்கொள்ள வைக்க கவின் முயற்சிக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா? இருவரும் கணவன்–மனைவியாக நடிக்க வேண்டிய சூழல் உருவானது எப்படி? என்பதே படத்தின் மீதிக்கதை.

கொங்கு இளைஞராக நடித்திருக்கும் கவின், காதல் ஏக்கம், ஏமாற்றம், நகைச்சுவை என பல்வேறு உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக காதல் காட்சிகளிலும், நகைச்சுவை தருணங்களிலும் அவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது. சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி ஆகியோரின் கூட்டணி பல இடங்களில் சிரிப்பை வரவழைக்கிறது.

நயன்தாரா வழக்கமான ஸ்டைலான தோற்றத்துடன் திரையை ஆக்கிரமிப்பதோடு, அனுபவம் வாய்ந்த நடிப்பால் கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கிறார். இருப்பினும், கவினுக்கும் நயன்தாராவுக்கும் இடையேயான வயது வித்தியாசம் சில காட்சிகளில் கண்களுக்கு உறுத்தலாகத் தெரிகிறது. ராதிகா, கே.பாக்யராஜ், பிரபு உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த நடிகர்களின் பங்களிப்பும் படத்திற்கு கூடுதல் பலம்.

பெரிய திருப்பங்களையோ, சிக்கலான திரைக்கதையையோ நம்பாமல், காதல், உறவு மற்றும் உணர்வுகளை மையமாக வைத்து எளிமையான காதல் கதையை நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட் கலந்து நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் விஷ்ணு எடவன்.

ராஜேஷ் சுக்லாவின் அழகான ஒளிப்பதிவு, ஜென் மார்ட்டினின் இனிமையான இசை ஆகியவை படத்தின் காதல் உணர்வுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.

மொத்தத்தில், காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை கலந்து எளிமையாக சொல்லப்பட்டிருக்கும் ‘ஹாய்’, பொழுதுபோக்கான காதல் படமாக ரசிக்க வைக்கிறது.

Suresh

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

13 hours ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

13 hours ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

13 hours ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

2 days ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

2 days ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

2 days ago