Chiyaan 63 Title Revealed
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் விக்ரமின் 63-வது படமாக உருவாகி வருகிறது.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். விக்ரமுடன் இணைந்து ரியா சுபு, ஊர்வசி, விடிவி கணேஷ், மேகா ராஜன், சுபாஷ் செல்வம், சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான ‘வீர தீர சூரன்: பாகம் 2’ திரைப்படத்தை ரியா சுபு தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணியில் 2016-ஆம் ஆண்டு வெளியான ‘இருமுகன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், ‘பவர்ஹவுஸ்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பாலிவுட்டிலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…
நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுடனான தனது காதல் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு குறித்து சமீபத்திய நேர்காணலில்…
திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தனது நிறம் மற்றும் தோற்றம் குறித்து இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்…
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘Shekhar Tonight’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர்…
நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முழுமையான கதை விவரங்கள்…
JAILER 2 Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson