Suriya’s Scene New Poster Released
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சூர்யாவின் 47-வது திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தை, ‘ஆவேஷம்’ புகழ் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
கேரளம் மற்றும் சென்னையில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முழுமையாக நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தது.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ மற்றும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகும் படம் என்பதால், ‘சீன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
‘சீன்’ திரைப்படம் வரும் நவம்பர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘Shekhar Tonight’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர்…
நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முழுமையான கதை விவரங்கள்…
JAILER 2 Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson
ஊரே பயப்படும் ரவுடியாக வலம் வரும் விஜய் சேதுபதி, சாராயம் காய்ச்சி பிழைப்பு நடத்துவதுடன், கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். மனைவி…
சுமார் 4,000 ஆண்டுகளாக உயிருடன் வாழ்ந்து வரும் மனிதராக நிவின் பாலி. காலங்கள் பல கடந்தாலும், அஞ்சலி மீதான அவரது…
ஆந்திராவில் தாதாவாக இருக்கும் சம்பத்துக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான மாஃபியா பணம் வெளிநாட்டில் உள்ள ஒரு லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது.…