Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அக்கா மீது ரூ.46 கோடி செக் மோசடி புகார் – விசாரணைக்கு ஆஜராகாத நடிகை ராதா!

Cheque Fraud Complaint – Radha Skips Police Inquiry

நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் புகார்தாரரான ராதாவிடம் விரிவான வாக்குமூலம் மற்றும் தொடர்புடைய ஆவணங்களைப் பெறுவதற்காக, செப்டம்பர் 24ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

ஆனால், திட்டமிட்டபடி இன்று (செப்.24) நடிகை ராதா விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. பணி நிமித்தமாக தற்போது வெளியூரில் இருப்பதாகவும், அதனால் நேரில் ஆஜராக கூடுதல் கால அவகாசம் வழங்குமாறும் ராதா தரப்பில் காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, தன் மீது தங்கை ராதா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை நடிகை அம்பிகா மறுத்துள்ளார். குடும்ப சொத்து தொடர்பான பிரச்னைகளை தீர்த்துக்கொள்வதற்காக ராதாவே தங்களுக்கு அந்த காசோலைகளை வழங்கியதாக அம்பிகா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராதா விசாரணைக்கு ஆஜராகாததால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.