Bharathi Kannamma serial Episode Update 05.02.22
வெண்பா வீட்டிலிருந்து பாரதி கிளம்பி வந்ததை தொடர்ந்து வெண்பா அவருக்கு போன் செய்து எந்த ஹோட்டலில் ரூம் போட்டு தங்கி இருக்க பாரதி சொல்லு நான் வருகிறேன் என கூறுகிறார். இல்ல நான் வீட்டுக்கு வந்துட்டேன் என பாரதி சொல்வதைக் கேட்டு வெண்பா அதிர்ச்சி அடைகிறார். உன்கிட்ட இல்லாத பணமா ஏதாவது ஸ்டார் ஹோட்டல்ல ரூம் போட்டு தங்க வேண்டியதுதானே என வெண்பா சொல்ல எங்க ஹேமா தாத்தா பாட்டியுடன் தான் இருப்பேன் என ஒரே அடம் பிடிக்கிறா என சொல்கிறார்.
உனக்கு இப்போதைக்கு ஒரு பேஸ் தேவை. அது உன் வீட்ல கண்டிப்பாய்க் கிடைக்காது. நான் வேணா சர்வீஸ் அபார்ட்மெண்ட்ல ஏதாவது பார்க்கட்டுமா? உனக்கு வேணாம் போட்டோ அனுப்பி வைக்கிறேன் நீ பார்த்துட்டு சொல்லு உடனே நான் ரெடி பண்ணிடுறேன். ஹேமாவை கூட்டிட்டு வரணும்னு கூட அவசியமில்லை அவ அங்கேயே கூட இருக்கட்டும். நீ மட்டும் வா நீயும் நானும் போய் தங்கலாம் என சொல்ல பாரதி அதெல்லாம் வேண்டாம் விடு என கூறுகிறார். விடாமல் வெண்பா பாரதியை நச்சரிக்க அவர் போனை கட் செய்து விடுகிறார்.
இதனால் கடுப்பான வெண்பா எல்லாமே போச்சு. என்னுடைய ஆசையில மண்ணள்ளிப் போட்டுட்டாங்க என கடுப்பாகிறார். இந்த பக்கம் வீட்டில் எல்லோரும் ஒன்றாக பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் லஷ்மி சௌந்தர்யாவுக்கு போன் செய்கிறார். உடனே ஹேமா சமையல் அம்மாகிட்ட நான் பேசுவேன் என பேசுகிறார். அந்த பக்கம் லஷ்மி ஹேமா நான் உன்கிட்ட பேச தான் போன் பண்ணேன் நீயே எடுத்துட்ட என சொல்கிறார்.
எல்லோரும் இங்கதான் இருக்காங்க என சொல்ல லஷ்மி அப்பனா லவுட் ஸ்பீக்கர் போடு என்ன சொல்கிறார். பிறகு எங்க அம்மாவுக்கு பிறந்தநாள் பெருசா செலபிரேட் பண்ண போறோம். நீங்க எல்லாரும் குடும்பத்தோட வரணும் டாக்டர் அங்கிளையும் கூட்டிக்கொண்டு வரணும் என சொல்கிறார். சௌந்தர்யா கண்டிப்பா வரோம் என சொல்கிறார். பிறகு எங்க அம்மா எங்க அப்பா யாருன்னு சொல்லுறேனு என்கிட்ட ப்ராமிஸ் பண்ணி இருக்காங்க. முதல் தடவையா எங்க அப்பாவை பார்க்க போறேன் ஒரே எக்சைட்டா இருக்கு என்ன சொல்கிறார். இந்த தகவலைக் கேட்டு வீட்டில் உள்ள எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அதன் பின்னர் கண்ணம்மா கோவிலுக்குச் சென்று இருக்க அங்கே பாரதியும் வெண்பாவும் வருகின்றனர். கண்ணம்மாவை பார்த்த வெண்பா வேண்டுமென்றே அவரை வெறுப்பேற்ற பாரதியிடம் நெருங்கி பழகுகிறார். இதனால் கண்ணம்மா கடுப்பாகிறார். பிறகு கோவிலை சுற்றி விட்டு கண்ணம்மா உட்கார்ந்து கொண்டிருக்க அப்போது வெண்பா அங்க பாரு கண்ணம்மா இருக்கா அவ கொஞ்சம் வெறுப்பேத்தலாம், அப்போதான் உன் மனசு சந்தோஷமா இருக்கும் என பாரதியை அழைக்கிறார். அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் வா போகலாம் என பாரதி சொல்லியும் அதை கேட்காமல் அழைத்துச் செல்கிறார் வெண்பா.
என்ன கண்ணம்மா தனியாக உக்காந்துட்டு இருக்க, கடைசி வரைக்கும் தனியாதான் இருக்கனும். சாமிகிட்ட அப்படி என்ன வேண்டிக் கொண்டிருந்த சாமி ஓகே சொல்லிட்டுச்சா என கேட்கிறார். என் பிரண்டு பாரதி என் வீட்டுக்கு கெஸ்டா வந்தபோது அவன தங்கவிடாமல் பண்ணிட்ட. இப்ப பாரு ரெண்டு பேரும் ஜாலியா கைகோர்த்து கோவிலுக்கு வந்து இருக்கும் என்ன பண்ண போற என சொல்கிறார். கண்ணம்மா அமைதியாகவே அமர்ந்து கொண்டு இருக்க அவரை மேலும் மேலும் வெண்பா வெறுப்பு ஏற்றுகிறார்.
இந்த நேரத்தில் சரியாக கோவில் நிர்வாகி ஒருவர் வந்து நீ டாக்டர் வெண்பா தான எனக் கேட்க ஆமா டொனேஷன் ஏதாவது வேணுமா ஹாஸ்பிடலுக்கு வந்து பாருங்க என கூறுகிறார். ஆஸ்பிட்டலுக்கு வரத்துக்கு சுடுகாட்டுல போய் படுத்துக்கலாம். வயிற்றில் இருந்த ண் கருவை கலைத்து சம்பாதிச்ச பாவிதான் நீ. நீ எதுக்கு இந்த கோவிலுக்கு வந்த? உன்னால அந்த சாமிக்கு கலங்கம் வந்துடும். நீ நிக்கிற இடத்துல புழு பூச்சி கூட முளைக்காது. இங்கிருந்து வெளியே போயிடு. இன்னொரு ரவுண்ட் வரும் போது நீ எங்க இருந்த எல்லாரையும் கூட்டி வைத்து அடித்து விரட்டுவோம் என சொல்கிறார்.
மேலும் பாரதி பார்த்து ஏம்பா நீ பார்க்கறதுக்கு நல்ல பையன் மாதிரி இருக்க இந்த பொம்பள கூட சேர்ந்து சுத்திக்கிட்டு இருக்க. இதனால உன் பேரு கெட்டுப் போய்விடும் என பாரதியையும் திட்டி விட்டு போகிறார். அதன்பிறகு கண்ணம்மா நான் அமைதியாக இருந்தேன். நீயா வந்து பேசி அசிங்கப்படுற.. நல்ல உங்களுக்கு கஷ்டம் வரும் போது கடவுள் பக்கத்தில் வந்து நிப்பாரு இப்போ அது நடந்துச்சு. என்ன டாக்டர் சார் சீக்கிரம் இவளோட பிரண்ட்ஷிப்பை கட் பண்ணி விடுங்க என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
உடனே வெண்பா பார்த்தியா பாரதி எவ்வளவு நக்கலா பேசுறா என சொல்ல நான் அப்போவே வேணாம்னு சொன்னேன் சாமி கும்பிட்டு போய் இருந்திருக்கலாம். அத விட்டுட்டு நீயா வந்து அசிங்கப்படுற, நீ கூப்டா நீ கோவிலுக்கு வந்து நானும் அசிங்க பார்க்கிறேன் எல்லாம் எனக்கு வேணும் வா என பாரதி கடுப்பாகி செல்கிறார். அதன் பின்னர் பாரதி வீட்டில் அமர்ந்து கொண்டே இருக்க அங்கு வந்த ஹேமா வெளியே போகிறோம் என சொல்ல எங்க ஷாப்பிங்கா என கேட்கிறார். இல்ல இந்த உலகத்திலேயே எனக்கு ரொம்ப பிடிச்ச பெஸ்ட் பிரண்டோட வீட்டுக்கு போறோம் என கூறுகிறார். அவங்க அம்மாவ கூட ஹேமாவுக்கு ரொம்ப பிடிக்கும் என சௌந்தர்யா ப்ளூ கொடுக்க பிறகு சமையல் அம்மா வீட்டுக்கு போறோம் என ஹேமா கூறுகிறார்.
அங்கே எதுக்கு என பாரதி கேட்க சமையல் அம்மாவுக்கு பிறந்தநாள் செலபிரேட் பண்ணப் போறாங்க. அதனால அவங்களை பாத்துட்டு வர போறோம் என சொல்கிறார். பிறகு ஹேமா சரி வாங்க பாட்டி போலாம் என கூப்பிட நீ எல்லா விசயத்தையும் சொல்லிட்டியா என சௌந்தர்யா கேட்கிறார். அதன்பிறகு ஹேமா எல்லோரும் கிப்ட்க்கு ஒரு ரெட்டர்ன் கிப்ட் கொடுப்பாங்கல, அந்த மாதிரி சமையல் அம்மா அவங்களோட பிறந்தநாள் விழாவில் லஷ்மியோட அப்பா யாரென்று சொல்ல போறாங்க. நீங்களும் இந்த பிறந்தநாள் விழாவிற்கு கண்டிப்பா வரணும் என சொல்கிறார். ஹேமா சொன்ன இந்த விஷயத்தைக் கேட்டு பாரதி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Meesaya Murukku 2 Official Trailer | Hiphop Tamizha | Khushbu Sundar | ACS Arun Kumar
Vaan Meeru Video Song | Enna Vilai | Karunaas | Nimisha | Sam CS |…
Maayapoove Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…
Neengalellam Lyrical Video | Aagayam | N.R. Raghunanthan | Jayamoorthy | Thinanthorum Nagaraj
DHIK.DHIK..DHIK... Official Teaser | Pavel | JSK | Chandini | Sandra | Bijesh | Srinivasan
Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…