தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக என்ற திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியாக உள்ள இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
ஏற்கனவே இந்தப் படத்தில் இருந்து இரண்டு சிங்கிள் டிராக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வாரத்தில் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது தளபதி விஜய், பூஜா ஹெக்டே, அனிருத் மற்றும் நெல்சன் திலீப் குமார் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் பூஜா ஹெக்டே தளபதி விஜய்யின் கையை பிடித்தபடி நிற்கிறார்.
இந்த புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.
View this post on Instagram

