வெற்றிகரமாக ஓராண்டு நிறைவு செய்த பீஸ்ட். போஸ்டருடன் படக்குழு வெளியிட்ட தகவல்

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முன்புறமாக உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைப்பில் பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்த வரும் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரை தொடர்ந்து தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த பீஸ்ட் திரைப்படம் ஓராண்டு நிறைவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அதாவது, நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த திரைப்படம் பீஸ்ட். இதில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, யோகி பாபு, vtv கணேஷ், செல்வராகவன் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

மேலும் அனிருத் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் இப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு செய்திருப்பதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய போஸ்டருடன் தெரிவித்துள்ளது. அதனை ரசிகர்கள் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.

jothika lakshu

Recent Posts

Baththa Trailer

Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | ‪@SaiAbhyankkar‬ | Balaji Tharaneetharan

5 hours ago

லெனின் பாண்டியன் – திரைவிமர்சனம்

கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…

6 hours ago

நடிகைகளை மட்டும் குறை சொல்வது நியாயமில்லை – நடிகை ரோஜா

கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…

6 hours ago

அக்கா மீது ரூ.46 கோடி செக் மோசடி புகார் – விசாரணைக்கு ஆஜராகாத நடிகை ராதா!

நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…

6 hours ago

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு – கமல்ஹாசன், குஷ்பு கருத்து

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…

6 hours ago

லவ்வர் பாய் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்கும் நடிகர் ஜீவன்!

தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…

7 hours ago