Prabhu Deva, Vadivelu-starrer 'Bang Bang' shooting wrapped up!
நடிகர் பிரபுதேவா மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் ‘பேங் பேங்’ (Bang Bang) ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் இயக்கியுள்ள நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
முன்னதாக இப்படத்தின் தலைப்பு மற்றும் அறிவிப்பு புரோமோவை இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா வெளியிட்டிருந்தார். 90களில் ‘காதலன்’, ‘மனதை திருடிவிட்டாய்’, ‘ராசைய்யா’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘எங்கள் அண்ணா’ போன்ற படங்களில் ரசிகர்களை கவர்ந்த பிரபுதேவா – வடிவேலு கூட்டணி, தற்போது மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.
மேலும், இப்படத்தில் பப்லூ பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கே.ஆர்.ஜி. கண்ணன் ரவி தயாரித்துள்ள நிலையில், தீபக் ரவி இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், ‘பேங் பேங்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனால், வரும் நாட்களில் இப்படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் ரிலீஸ் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…
சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘புருஷன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் இடம்பெறும்…
சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்துகொண்டு, சமூக வலைதளங்களில் வெளியாகும் எதிர்மறையான கருத்துகள் மற்றும் விமர்சனங்கள்…
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…