Don’t Waste Your Time Responding to Unnecessary People - Actor Suriya
சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்துகொண்டு, சமூக வலைதளங்களில் வெளியாகும் எதிர்மறையான கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “சமூக வலைதளங்களில் ஒரு முட்டாள் ஏதாவது தவறான பதிவைப் போட்டால், அதற்கு நாமும் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் நாமும் முட்டாளாகிவிடுவோம். நாம் எப்போதும் நாமாகவே இருப்போம்; அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும்.
எல்லோருக்கும் எல்லாவற்றையும் புரிய வைக்க வேண்டும், எல்லோரையும் மாற்ற வேண்டும் என்று நினைத்தால் அது மிகவும் கடினம். நாம் சொல்வது சிலருக்குப் புரியும்; முக்கால்வாசிப் பேருக்குப் புரியாது. அதனால் தேவையில்லாத நபர்களிடம் பேசி நமது நேரத்தையும் ஆற்றலையும் வீணடிக்க வேண்டாம்” என அறிவுறுத்தினார்.
மேலும், எதிர்மறை எண்ணங்களுக்கும் வெறுப்புப் பிரசாரங்களுக்கும் இடம் கொடுக்காமல், “அன்பை மட்டுமே நிரப்புவோம்” என்ற நேர்மறையான எண்ணத்துடன் ரசிகர்கள் செயல்பட வேண்டும் என்றும் சூர்யா கேட்டுக்கொண்டார்.
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…
சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘புருஷன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் இடம்பெறும்…
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…