Release Date Announced for Arjun-Abhirami Starrer ‘Blast’!
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ப்ளாஸ்ட்’ (Blast). இதில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி மற்றும் பிரீத்தி முகுந்தன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
குடும்பத்துடன் இணைந்து ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் முன்னாள் உதவி இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், பிரதீப் இ. ராகவ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். மேலும், ‘கே.ஜி.எஃப்’ படங்கள் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், இந்தப் படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
ஜான் கொக்கென், விவேக் பிரசன்னா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு தணிக்கைக்குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்நிலையில், ‘ப்ளாஸ்ட்’ திரைப்படம் வருகிற 28ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…