பழனிச்சாமி எடுத்த முடிவு,பாக்யா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பழனிச்சாமியை உட்கார வைத்து பாக்யா குடும்பத்தினர் எல்லோரும் உட்கார்ந்திருக்க அக்கா பையன் விமல் மாமா எப்ப தான் உங்களுக்கு கல்யாணம் என்று கேட்க அட நீயும் கேட்க ஆரம்பிச்சிடுயாடா என்று பழனிச்சாமி சொல்கிறார்.

பிறகு எழில் உங்களுக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும் சார் என்று கேட்க ராமமூர்த்தியும் ஆமாம்பா சொன்னா அதுக்கேத்த மாதிரி பொண்ணு பார்க்கலாம் என்று சொல்கிறார். பிறகு பழனிச்சாமி எனக்கு என்ன பிடிக்கும்னு நான் சொல்லாமலேயே அவங்களுக்கு தெரியணும் என்று முதல் பாயிண்ட்டை சொல்ல பாக்யா ஸ்வீட்டை கொண்டு வந்து கொடுக்க அதை சாப்பிட்டு பார்த்து நான் நினைச்ச மாதிரியான டேஸ்ட்ல இருக்கு என சந்தோஷப்படுகிறார்.

அடுத்ததாக இரண்டாவது பாயிண்டு கேட்க என் அம்மா என்றால் எனக்கு உசுரு அவங்கள நல்லபடியா பார்த்துக்கணும் என்று சொல்ல பாக்கியா ரொம்ப நேரமா நின்னுகிட்டு பேசிட்டு இருந்த பழனிச்சாமி அம்மாவை உட்கார வைத்து அவரிடம் அன்பாக பேசுவதை பார்க்கிறார்.

அதைத்தொடர்ந்து மூன்றாவது பாயிண்ட் கேட்க என் அக்கா தங்கச்சிங்கள அவங்க அக்கா தங்கச்சிங்க மாதிரி நினைச்சு பழகணும் என்று சொல்ல பாக்கியா பழனிச்சாமியின் அக்கா தங்கச்சிக்கு ஸ்வீட்டை கொண்டு வந்து கொடுக்க அது தெரியாத்தனமாக மேலே கொட்டிக்கொள்ள பாக்யா தன்னுடைய புடவையை எடுத்து துடைத்து விடுவதை பார்க்கிறார்.

பிறகு செல்வி குடும்பத்த பொறுப்பா பார்க்கிறதெல்லாம் இருக்கட்டும், வேற எப்படி வேண்டும் முடி நீளமா வேணுமா என்ன ஏது என்று கேட்க அவங்கள பார்க்கும்போது எனக்குள்ள ஒரு லைப் எரியும் என்று சொல்ல பாக்கியா வந்து நிற்க அவரைச் சுற்றி இருக்கும் லைட்டுகள் எரிய தொடங்குகிறது. இதையெல்லாம் பார்த்து பழனிச்சாமி தனக்கு ஏற்ற பெண் பாக்கியா தான் என்பதை புரிந்து கொள்கிறார்.

அவருக்குள் காதல் மலர பாக்யாவை பின் தொடர்ந்து ரசித்தவாறு இருக்க அக்கா என்ன தம்பி வெட்கமெல்லாம் படுற என்று கேட்க நான் ஒன்னு சொல்லட்டா அந்த பக்கம் போக்கா என்று அனுப்பி வைக்கிறார். பிறகு பாக்யாவின் குடும்பத்தினர் எல்லோரும் வீட்டுக்கு கிளம்ப பழனிச்சாமி நம்ம பாக்கியாவிடம் சமைச்சதுக்கு பணம் கொடுக்க பாக்யா அதை வாங்க மறுக்கிறார். பணத்தை கொடுத்து என்னை அன்னியமாகிடாதீங்க என்று சொல்கிறார்.

பிறகு பழனிச்சாமி பங்க்ஷனில் நடந்த விஷயத்தை எல்லாம் நினைத்துப் பார்த்து வெக்கப்பட்டு நின்று கொண்டிருக்க அவரது அம்மாவும் அக்காவும் வந்து பாக்யாவை உனக்கு புடிச்சிருக்கு தானே கல்யாண விஷயமா பேசலாமா என்று கேட்க பழனிச்சாமி அங்கு எனக்கு நல்ல தோழி என சமாளிக்கிறார். நீங்க பாட்டுக்கு எதையாவது பேசி வைக்காதீங்க நான் சொல்ற வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்க என்று சொல்லி உள்ளே செல்கிறார்.

பிறகு பழனிச்சாமி நம்ம தன்னுடைய மகளிடம் நாம ரெண்டு பேரும் சேர்ந்து அவனை மாற்றலாம் என்று முடிவெடுக்கின்றனர். மறுபக்கம் பாக்கியா எழில், அமிர்தா மற்றும் ஈஸ்வரியிடம் பழனிச்சாமி சாருக்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேனு அவங்க அம்மாவுக்கு வாக்கு கொடுத்தேன். ஆனால் அதுக்கப்புறம் எதுவுமே பண்ணல. சொந்தக்காரங்க ஊர்ல தெரிஞ்சவங்கன்னு ஏதாச்சு பொண்ணு இருந்தா சொல்லுங்க அத்தை அவர் என்னால மரியாதை வச்சிருக்காரு. நான் பேசினா கண்டிப்பா சம்மதம் சொல்லிடுவாரு என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

‘பாட்ஷா 2, பேட்ட 2’ படங்களில் நடிக்க மறுத்தது ஏன்? – ரஜினிகாந்த் விளக்கம்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தனது வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தையும்,…

22 minutes ago

குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை! – நடிகை வரலட்சுமி சரத்குமார்

கடந்த 2024-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் கலைக்கூட உரிமையாளருமான நிக்கோலாய் சச்தேவை நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்துகொண்டார்.…

30 minutes ago

கேரள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…

37 minutes ago

ரஜினியின் சுயசரிதை விரைவில் வெளியாகும்! – வைரமுத்து தகவல்

நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்த கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, அவருடன் கலை மற்றும் வாழ்வியல் குறித்து உரையாடியதாகவும், அரசியல் குறித்து பேசவில்லை…

42 minutes ago

ராமாயணா முதல் பாகம் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம், வரும் நவம்பர் 5-ம்…

56 minutes ago

Naan Ratchasan Lyrical Video

Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…

2 days ago