தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் பணத்தைக் கேட்க தயாராக அதை பார்க்க முத்து இவர் எதுக்கோ அடிபோடுற மாதிரி இருக்கு என்று சொல்கிறார்.
பிறகு நான் இந்த கனடா வேலைக்கு போய் ஆகணும்னு முடிவு எடுத்துட்டேன் அதுக்கு பணம் வேண்டும் அம்மா நினைச்சா கண்டிப்பா முடியும் என்று சொல்ல அண்ணாமலை உங்க அம்மா நினைச்சா மட்டும் எப்படி முடியும் ஆகாசத்திலிருந்து பணம் கொட்டுமா என்று கேட்கிறார்.
இல்லப்பா வீடு இருக்கே என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். முத்து என்னடா இன்னும் இவன் கண்ணு வீட்டு மேல வரலையேன்னு நினைச்சுட்டே இருந்தேன். மூக்கு வேர்த்து இருக்கு என்று சொல்கிறார். மனோஜ் விஜயாவின் கையை பிடித்துக் கொண்டு நீங்க மனசு வச்சா கண்டிப்பா நடக்கும் மா என்று சொல்கிறார்.
அதன் பிறகு வீட்டுக்கு வரும் ரோகிணி என்ன எல்லோரும் சீரியஸா பேசிட்டு இருக்கீங்க என்று கேட்க முத்து சீரியஸ் எல்லாம் பேசல இவன் காமெடி பண்ணிக்கிட்டு இருக்கான் என்று கலாய்க்கிறார். மீனா அவர் கனடா வேலைக்கு போக வீட்டை வச்சு பணம் கொடுக்க சொல்கிறார் என்று சொல்ல மனோஜ் எல்லாம் அவளுக்கு தெரியும் அவகிட்ட பேசிட்டு தான் இங்க வந்து பேசுறேன் என்று சொல்கிறார்.
உடனே ரோகிணி இல்ல ஆண்ட்டி என்கிட்ட பணம் கேட்டாரு என்னால இப்ப கொடுக்க முடியாது, என்னுடைய நிலைமை உங்களுக்கே தெரியும் அதனால அவசரத்துக்காக சொன்னேன் என்று மழுப்ப விஜயா என்ன சொல்லப் போகிறார் என்று எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக மனோஜை பிடித்து தள்ளி உன்னை நம்பி இந்த வீட்டை அடகு வச்சு கொடுத்துட்டு அப்புறம் நாங்க எல்லாரும் பிளாட்பார்ம்ல படுக்கிறதா? எங்கப்பா எனக்காக கொடுத்த வீடு இது என்று பேசுகிறார். நான் கனடாவுக்கு போனா இந்த பணம், பழைய பணம் என எல்லாத்தையும் கொடுத்திடுவேன் என்று சொல்லி கேட்க விஜயா முடியவே முடியாது என மறுப்பு தெரிவிக்கிறார்.
மனோஜை திட்டி அதிர வைக்கிறார். உன்னால இந்த ஊரிலேயே என்ன வேலைக்கு போய் சம்பாதிக்க முடியுமோ அதை சம்பாதிச்சா போதும் என ஷாக் கொடுக்கிறார். திரும்பத் திரும்ப மனோஜ் ப்ளீஸ் மா ப்ளீஸ்மா என்று கேட்க விஜயா என்னோட முடிவுல எந்த மாற்றமும் கிடையாது என்று சொல்ல அண்ணாமலை இன்னைக்கு தானே பொறுப்பான அம்மாவா நடந்திருக்க. இதே மாதிரி அவன்கிட்ட ஆரம்பத்தில் இருந்து நடந்திருந்தால் அவன் ஒழுங்கா இருந்திருப்பான் அவன் கெட்டுப் போக காரணமே நீ தான் என சொல்கிறார்.
மேலும் உனக்கு பணம் வேணும்னா உன் பொண்டாட்டி கிட்ட கேளு என்று சொல்ல ரோகினி இப்ப என்னால தர முடியாது என்று பதில் சொல்ல உங்கப்பா வெளியில வந்த பிறகு கொடு அப்பாவும் வேலைக்கு போகட்டும் என்று பதில் கொடுக்கிறார்.
அடுத்ததாக மனோஜ் பார்ட்டிக்கு வந்து உட்கார்ந்திருந்து தனக்கு கடன் கொடுத்த நண்பரை வரவைத்து அவரிடம் நடந்ததை சொல்லி 14 லட்சம் ரூபாய் கடனாக கேட்க 20000-க்கு சென்னை முழுக்க சுத்த விட்டவன் நீ 14 லட்சம் உன்னை நம்பி கொடுத்த நான் சந்திர மண்டலத்துக்கு போனாலும் பணம் கிடைக்காது என சொல்கிறார். அதுவும் இல்லாம அவ்வளவு பணம் எல்லாம் என்கிட்ட கிடையாது என்று சொல்கிறார்.
மனோஜ் எனக்கு கண்டிப்பா பணம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்க எனக்கு தெரிஞ்ச சாமியார் ஒருத்தர் இருக்காரு அவர் ஏதாச்சும் பரிகாரம் சொல்வாரு அத பண்ண கண்டிப்பா உனக்கு நல்லது நடக்கும் என்று சொல்லி அந்த சாமியாரிடம் மனோஜை கூட்டி செல்கிறார்.
மறுபக்கம் சுருதி ஸ்கூட்டியில் வந்து கொண்டிருக்க பிஜு வழியில் சுருதியை பார்த்து இப்ப நீ தனியா தான் இருக்கேன்னு கேள்விப்பட்டேன் நான் இருக்கும்போது நீ எதுக்கு தனியா இருக்கணும்? அந்த ரவிக்கு உன் அருமை புரியாம இருக்கலாம், ஆனா நான் அப்படி இல்லை உன்னை குயின் மாதிரி வச்சு பார்த்துப்பேன் என்று கையை பிடித்து இழுக்க ஸ்ருதி அவனை அறைய பிஜூ என்னையே அடிச்சிட்டியா? உன்ன விட மாட்டேன் என்று வலுக்கட்டாயமாக பிடித்து நிறுத்த எனக்கு வந்து அவனை அடித்து ஓட விடுகிறார். இன்னொரு முறை இந்த பொண்ணு பக்கம் பார்த்து மூஞ்சி சேப்பையே மாத்திடுவேன் என வார்னிங் கொடுக்கிறார்.
பிறகு ஸ்ருதியிடம் உனக்கு என் மேல தான கோபம் அதை என்கிட்ட காட்டு எனக்கு பிரச்சனையே இல்ல ஆனா என் தம்பியை தண்டிக்காத. அவன் நீ வந்தாதான் வீட்டுக்கு வருவேன்னு ரெஸ்டாரன்ட்லயே கிடக்குறான் என சொல்லி கிளம்பி வருகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Meesaya Murukku 2 Official Trailer | Hiphop Tamizha | Khushbu Sundar | ACS Arun Kumar
Vaan Meeru Video Song | Enna Vilai | Karunaas | Nimisha | Sam CS |…
Maayapoove Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…
Neengalellam Lyrical Video | Aagayam | N.R. Raghunanthan | Jayamoorthy | Thinanthorum Nagaraj
DHIK.DHIK..DHIK... Official Teaser | Pavel | JSK | Chandini | Sandra | Bijesh | Srinivasan
Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…