I Don’t Want to Have Children! – Actress Varalaxmi Sarathkumar
கடந்த 2024-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் கலைக்கூட உரிமையாளருமான நிக்கோலாய் சச்தேவை நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும் திரையுலகில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் வரலட்சுமி, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பம் குறித்த முடிவுகளை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
அந்த நேர்காணலில் பேசிய அவர், தனக்குக் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார். இது எந்தவொரு உடல்நலக் குறைபாட்டின் காரணமாகவும் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும், தனது தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் கணவர் நிக்கோலாயுடன் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.
மேலும், திருமணமான அனைவரும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று குறிப்பிட்ட வரலட்சுமி, குழந்தை வளர்ப்பில் இருக்கும் பொறுப்புகள் குறித்தும் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பு, அதன் வளர்ப்பு மற்றும் எதிர்காலத்திற்கான முழுப் பொறுப்பையும் ஏற்கத் தயாராக இருக்கிறோமா என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் என்றும், அந்தப் பொறுப்பை ஏற்கத் தயாராக இல்லாதவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதும் பொறுப்பான முடிவுதான் என்றும் தெரிவித்துள்ளார்.
நிக்கோலாய் சச்தேவுக்கு முதல் திருமணத்தின் மூலம் ஏற்கனவே ஒரு மகள் உள்ளார். அவரைத் தனது சொந்த மகளாகவே கருதுவதாகக் கூறிய வரலட்சுமி, தங்களிடம் இருக்கும் இரண்டு செல்ல நாய்களையும் குழந்தைகளைப் போல வளர்த்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அவர்கள்தான் தங்களது குடும்பம் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தை பெற்றுக்கொள்வது தொடர்பாகத் தனது தனிப்பட்ட விருப்பத்தையும், பெற்றோர் என்ற பொறுப்பின் முக்கியத்துவத்தையும் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ள வரலட்சுமி சரத்குமாரின் கருத்துகள் தற்போது கவனம் பெற்று வருகின்றன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில்…
நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள ‘லவ் பைட்’ திரைப்படம் வரும் டிசம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு…
தமிழ்நாட்டில் பண்டிகைக் கால வார இறுதி நாட்களில் புதிய திரைப்படங்களை காலை 6 மணி முதல் திரையிடவும், அதிகாலை 2.30…
Dayangaram Official Teaser | VJ Siddhu | Siddhu Kumar | Dr. Ishari K Ganesh |…
O Mysaa Re Lyrical Video | Mysaa | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy|…
John Doe Official Trailer | Arjun Das, Sanchana Natarajan | Madhumita | Arka Mediaworks |…