Vijay Sethupathi Thanks Kerala Fans for the Overwhelming Love for ‘Baththa’!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக, தமிழகத்தைத் தாண்டி கேரளாவிலும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, கேரள ரசிகர்களுக்கு விஜய் சேதுபதி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘பத்தா’ திரைப்படத்திற்கு அளித்துள்ள அன்புக்கும் ஆதரவுக்கும் கேரள ரசிகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும், ரசிகர்களுடன் நேரில் இருக்க விரும்புவதாகவும், தற்போதைய சூழல் காரணமாகத் தொலைவிலிருந்து தனது அன்பைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து படத்திற்கு ஆதரவளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இப்படத்தில் விஜய் சேதுபதி உள்ளூர் தாதாவாக முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு சாதாரண பள்ளிச் சிறுவனால் அந்தத் தாதாவின் அகந்தை உடைக்கப்படுவதும், அதன்பிறகு அவரது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுமே படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளன.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் பாலாஜி தரணிதரனும் விஜய் சேதுபதியும் மூன்றாவது முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இதில் சாய் பிரித்விராஜ், லிஜோமோல் ஜோஸ், சஹஸ்ரா ஸ்ரீ, சாந்தி பாலச்சந்திரன், ஹரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய பொழுதுபோக்குத் திரைப்படமாக மட்டுமின்றி, மனிதனின் அகந்தை மற்றும் மனமாற்றம் குறித்தும் பேசும் படைப்பாக ‘பத்தா’ அமைந்துள்ளதாக ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் கருத்துகள் வெளியாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தனது வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தையும்,…
கடந்த 2024-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் கலைக்கூட உரிமையாளருமான நிக்கோலாய் சச்தேவை நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்துகொண்டார்.…
நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்த கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, அவருடன் கலை மற்றும் வாழ்வியல் குறித்து உரையாடியதாகவும், அரசியல் குறித்து பேசவில்லை…
நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம், வரும் நவம்பர் 5-ம்…
Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…
Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…