Why Rajinikanth Rejected Baashha 2 and Petta 2 but Agreed to Jailer 2
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தனது வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தையும், ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதன் பின்னணியையும் மனம் திறந்து பேசியுள்ளார்.
‘ஜெயிலர் 2’ படத்தின் சிறப்பு ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியான ‘ஜெயிலர் 2 சூப்பர் ஷோ’வில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த், தனக்கு ‘பாட்ஷா 2’, ‘பேட்ட 2’ உள்ளிட்ட படங்களின் இரண்டாம் பாகங்களுக்கான கதைகள் பலமுறை கூறப்பட்டதாகவும், ஆனால் அவற்றில் நடிக்கத் தான் சம்மதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மறைந்த தயாரிப்பாளர் ஆர்.எம். வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனம் சார்பில் ‘பாட்ஷா 2’ படத்திற்கான கதை தன்னிடம் பலமுறை கூறப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ‘பேட்ட 2’ படத்திற்கான கதையை முன்வைத்ததாகவும், ஆனால் அந்தக் கதை தனக்கு விருப்பமளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தை ஓடிடியில் பார்த்தபோதுதான் அதன் இரண்டாம் பாகத்திற்கான வலுவான கதைக்களம் இருப்பதை உணர்ந்ததாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். குறிப்பாக, வர்மா கதாபாத்திரம் டைகர் முத்துவேல் பாண்டியனுக்கு விடுக்கும் எச்சரிக்கையும், ரூ.1,000 கோடி மதிப்புள்ள பொருட்களைக் கொண்ட மூன்று கன்டெய்னர்களும் இரண்டாம் பாகத்திற்கான கதையை விரிவுபடுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தியதாக அவர் விளக்கியுள்ளார்.
ஆரம்பத்தில் இரண்டாம் பாகம் எடுப்பதற்கு நெல்சன் தயக்கம் காட்டியதாகவும், சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு வலுவான கதையுடன் திரும்பி வந்ததாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுவே ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்கத் தான் ஒப்புக்கொண்டதற்கான முக்கியக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மீண்டும் இணைந்துள்ள இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி, வித்யா பாலன், சூரஜ் வெஞ்சாரமூடு, ஜட்டின் சர்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா ஆகியோரும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் கலைக்கூட உரிமையாளருமான நிக்கோலாய் சச்தேவை நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்துகொண்டார்.…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…
நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்த கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, அவருடன் கலை மற்றும் வாழ்வியல் குறித்து உரையாடியதாகவும், அரசியல் குறித்து பேசவில்லை…
நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம், வரும் நவம்பர் 5-ம்…
Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…
Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…