Ramayana Part 1 Release Date Announced
நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம், வரும் நவம்பர் 5-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும், படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தசரா பண்டிகையன்று தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். மேலும், லட்சுமணனாக ரவி துபே, ராவணனாக ‘கே.ஜி.எஃப்’ புகழ் யாஷ், அனுமனாக சன்னி தியோல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இணைந்து இசையமைக்கின்றனர். இப்படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம், ஐமேக்ஸ் (IMAX) உள்ளிட்ட பிரீமியம் திரையரங்க வடிவங்களிலும் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தனது வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தையும்,…
கடந்த 2024-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் கலைக்கூட உரிமையாளருமான நிக்கோலாய் சச்தேவை நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்துகொண்டார்.…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…
நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்த கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, அவருடன் கலை மற்றும் வாழ்வியல் குறித்து உரையாடியதாகவும், அரசியல் குறித்து பேசவில்லை…
Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…
Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…