தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இத சீரியலில் இன்றைய எபிசோடில் செழியன் கோபியை ஜாக்கிங் அழைத்துச் செல்ல கோபி நீ முன்னாடி ஜாக்கிங் போ நான் பின்னர் வரேன் என்று அனுப்பி வைக்க செழியன் சென்ற பிறகு கோபி ஏதோ ஒரு சிந்தனையில் நடந்து வந்து கீழே விழப் பார்க்க எழில் தாங்கி பிடிக்கிறார்.
கோபி அது எழில் என்று தெரியாமல் தேங்க்யூ சார் தேங்க்யூ சோ மச் என்று சொல்ல கடைசியில் எழில் என்னப்பா பாத்து வர மாட்டீங்களா என்று உட்கார வைக்க கோபி கல்லு தடுக்கிடுச்சு என்று சொல்ல கொஞ்சம் காலை பாருங்க லேஸ் கட்டவே இல்ல என்று சொல்லி கோபிக்கு லேஸ் கட்டி விடுகிறார் எழில். இதனால் கோபி பிள்ளைகள் எல்லோரும் தன்னை விட்டுக் கொடுக்காமல் இருப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறார்.
அடுத்ததாக எழில் அங்கிருந்து கிளம்பியதும் செழியன் வந்து கோபியை கூட்டிச் செல்ல இருவரும் ஜாக்கிங் சென்று விட்டு வீட்டிற்கு வருகின்றனர். வீட்டில் ஈஸ்வரி கோபியை கூப்பிட்டு எங்க எல்லாருக்காகவும் ஓடி ஓடி உழைச்ச நீ இப்படி உட்கார்ந்து இருக்கறத பார்க்க கஷ்டமா இருக்கு என்று சொல்லி ராதிகாவையும் கூப்பிட்டு நகைகளை எடுத்து வந்து கொடுக்க கோபி வேண்டாம் என்று சொல்லியும் ஈஸ்வரி இதை வச்சுக்கோ என்று சொல்ல ராமமூர்த்தியும் அதுதான் இவ்வளவு சொல்றாளே வச்சுட்டு பிரச்சனையை தீர்க்க பாரு என்று சொல்லி கொடுக்கிறார்.
கடைசியாக ராதிகா கோபியின் கையைப் பிடித்து நகையை வாங்கி ஈஸ்வரியிடம் கொடுத்துவிட்டு அவர் ஏற்கனவே ஆபிஸ் மூடுனதில் உடைந்து போய் இருக்காரு இதுல உங்க கிட்ட செழியன் கிட்ட எல்லாம் பணம் வாங்கினா அவர் இன்னும் உடைந்து போயிடுவாரு. சந்தோஷத்துல கூட சேர்ந்து சந்தோஷப்படுவும் கஷ்டத்துல கூட தனியா நிக்கவும் தானே கல்யாணம் பண்றோம் அவருடைய பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன் என்று கோபியின் கையை பிடித்து கூட்டிச் சென்று பாக்யாவிடம் நான் இருக்கிற வரைக்கும் இவரை யாரிடமும் கை நீட்ட விடமாட்டேன் என்று பதிலடி கொடுத்துவிட்டு மேலே செல்கிறார்.
இதையடுத்து செல்வி பாக்யா அமிர்தா ஆகியோர் கிச்சனில் இருக்கும் போது எழில் பாக்யாவின் கண்ணை மூட வைத்து ரெஸ்டாரன்ட் ஓப்பனிங்காக அடிக்கப்பட்ட இன்விடேஷனை எடுத்துக் கொடுத்து சப்ரைஸ் செய்கிறார். பாக்கியாவுக்கு தெரியாமல் எல்லோரும் சேர்ந்து இன்விடேஷன் அடித்த விஷயம் தெரிய வருகிறது.
பிறகு இந்த நேரத்தில் ஜெனியும் இங்க இருந்திருந்தால் சந்தோஷத்துல துள்ளி குதிச்சிருப்பா என்று ராமமூர்த்தி சொல்ல பாக்யா வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
நான் அனுபவிக்காத கஷ்டமே இல்லை என்று நடிகை சாய் தன்ஷிகா பேசியுள்ளார். மனதோடு மழைக்காலம் படத்தின் மூலம் கதாநாயகியின் தோழியாக…
சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சால் திரையரங்கத்தை அதிர விட்டுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார்…
டிரைவராகவே தொடர விரும்புவதாக அஜித் கூறியதால் ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' படத்தில் நடித்து…
அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்ஷன் அவதாரம் அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன்…