moondru mudichu serial promo update 08-02-26
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.இந்த நிலையில் தற்போது மூன்று முடிச்சு சீரியல் மற்றும் சிங்க பெண்ணே சீரியலும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.
நேற்றைய எபிசோடில் நிச்சயமாக சூர்யா சார் வருவாரு அவர் ஒன்னும் கோழை கிடையாது எதுவாயிருந்தாலும் எதிர்த்து நிற்பார் என்று நந்தினி சொல்லுகிறார். ராஜாங்கம் சூர்யா எப்ப என்ன பண்ணுவானு அவனுக்கே தெரியாது என்று சொல்ல, நேத்து சூர்யா வீரா கிட்ட கோவப்பட்டது அவன் பண்ண தப்புக்காக தானே என்று அருணாச்சலம் சொல்லுகிறார். உடனே பஞ்சாயத்தில் இருக்கும் மணியார் ராஜாங்கத்திற்கு சப்போர்ட் பண்ணி பேசுகிறார். நாங்க இப்போ இவங்க குடும்பத்து மேல கொலை பழி போட்டிருக்கோம் இவங்க இந்த பழியோட அம்மனுக்கு கிரீடம் வைக்க கூடாது என்று சொல்ல அருணாச்சலம் சூர்யா வராமல் எந்த உண்மையும் தெரியாது இதனால் நாங்க பஞ்சாயத்துக்கு கட்டுப்படுகிறோம் என்று சொல்லிவிட ஊர் பொதுவாக அம்மனுக்கு கிரீடம் சாத்தப்படும் என்று முடிவெடுத்து விட்டார் ராஜாங்கமும்,பரமு சந்தோஷப்பட்டு சென்று விடுகின்றனர். மறுபக்கம் மகேஷ் போலீஸ் இடம் பேச நந்தினி போலீஸ் சூர்யா சார் கண்டுபிடிக்கறதுக்குள்ள நம்ம கண்டுபிடிச்சு அவர் மேல தப்பு இல்லன்னு நிரூபிக்கணும் என்று சொல்ல, எங்களுக்கு அந்த மணியகார் மேல தான் சந்தேகமா இருக்கு அவர்தான் எல்லா விதத்துலயும் ராஜாங்கத்தை காப்பாத்திகிட்டு இருக்காரு அவர கண்காணிச்சாலே எல்லா உண்மையும் வெளியே வந்திடும் என்று நந்தினி சொல்லி அதற்கு என்னிடம் ஒரு திட்டம் இருக்கு என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் சூர்யாவிடம் வந்த ராஜாங்கமும் அவரது மனைவியும் நீங்கதான் இந்த ஊரை விட்டு போயிட்டீங்க இல்லடா அங்கேயும் உங்களுக்கு வேலை செய்யுற இடத்துல மரியாதை கொடுக்குறதுக்கு அத்தனை பேர் இருக்காங்க அதையும் பத்தாம இங்க வர்றீங்களா என்று கேட்க அது எப்படி பத்தும் ஆசை யாரை விட்டது என்று பரமு சொல்ல இப்ப நீ என்னடா பண்ணிக்கிட்டு இருக்க நீயும் எல்லாம் வேணும் தானடா இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கேன் என்று சூர்யா சொல்லுகிறார். நான் இந்த ஊருக்காக உழைச்சு இருக்கேன் என்று தெரியுமா? உங்க அப்பன் ஸ்கூல் கட்ட பணத்தை கொடுத்துட்டா சரியா போயிடுமா அதுக்காக எவ்வளவு கஷ்டப்படணும் தெரியுமா கடைசியா உங்க பேரை போட்டுட்டு தொறந்து வச்சிட்டு போயிடுவீங்களா என்ற கோபப்பட, வீராவோட உயிருக்கு இவன்தான் பதில் என்று சொல்ல வீராவுக்கு என்ன ஆச்சு என்று கேட்க, உன்னால தாண்டா அவன் செத்துப்போன என்று பரமு சொல்லுகிறார். என் கையால அவனை கொன்னு இருந்தாலும், அட நீ தான் கொன்னுட்டு தலைமறைவா இருக்குன்னு சொல்லிட்டோம் இப்போ உன்ன சாகடித்துவிட்டு இந்த ஊர் பக்கமே உன்ன வரவிடாம பண்ணிடுவோம் அதையும் மீறி வந்தீங்கனா ஒருவர் உயிரா போய்கிட்டு தான் இருக்கும் என்று சொல்ல, ரொம்ப தப்பு பண்ற ராஜாங்கம் இந்தப் பாவம் உன்னை சும்மா விடாதே என்று சொன்னால் பரமு, இதுக்கு மேல வெயிட் பண்ண வேணாம் இவனை எரிச்சிடலாம் என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் மணியாரின் மகள் பிரச்சனை என்பதால் பணத்தை கொடுத்து அனுப்ப அப்போது கார் வர அன்பு அந்த காரை மாஸ்க் போட்டு ஒட்டி வந்து அவரது மனைவியையும் மகளையும் அழைத்துச் செல்ல உடனே மாப்பிள்ளை வீட்டிலிருந்து கார் வர மணியார் அதிர்ச்சியடைகிறார். உடனே புது நம்பரில் இருந்து மணியாருக்கு போன் வர நந்தினி பேசுகிறார். நீங்க யாரு என்று கேட்க நான் யாருன்னு தெரிஞ்சுக்கணுமா இல்ல உங்க மனைவியும் மகளும் வேணுமா என்ற கேட்கிறார். நான் அவங்கள அனுப்புறதுக்கு முன்னாடி உங்க வாயால இருந்து உண்மைய சொல்லனும் என்று சொல்லி, மேலும் மேலும் மறைக்காமல் எல்லா உண்மையும் சொல்லணும் என்று சொல்ல, உங்க பொண்ணை வாழவைக்க அடுத்தவங்க வாழ்க்கையில் இப்படி பண்ணுவீங்களா நான் சொல்ற இடத்துக்கு நீங்க வாங்க என்று லொகேஷன் அனுப்பச் சொல்லி வர சொல்லுகிறார். மறுபக்கம் சூர்யா மீது ராஜாங்கம் பெட்ரோலை எடுத்து ஊத்த, மணியார் வந்தவுடன் நந்தினி அன்பு மற்றும் ஆனந்தி மூவரும் அவரிடம் கேள்வி கேட்கின்றனர். உடனே அவர் நீங்களா ஏற்கனவே கொலைப்பழி உங்க மேல இருக்கு இதுல என் குடும்பத்த வேற கடத்தி வச்சி மிரட்டுறீங்களா என்று கேட்கிறார். இப்போ உண்மைய சொல்ல போறீங்களா இல்லையா சூர்யா எங்க இருக்காரு என்று கேட்க, இப்பவே போலீஸ் ஸ்டேஷன் போனால் உங்களை என்ன பண்ணுவாங்கன்னு தெரியல என்று சொல்ல போங்க நாங்களும் கட்டு கட்டா பணத்தை வாங்கி பொன்னை அனுப்புனீங்களே அத சொல்றோம் என சொல்லுகின்றனர்.
மணியாரின் மகள் இந்த பணத்தை ராஜாங்கம் தான் இருந்துதான் வாங்கினார் என்ற உண்மையை சொல்லுகிறார். அப்போதுதான் பரமு போன் போட்டு பஞ்சாயத்தை எங்க பக்கம் முடிக்க வேண்டியது உங்க பொறுப்பு என்று சொல்லியதை அவர் மகள் கேட்டு விடுகிறார். நீங்க ஏன் இப்படி பண்ணீங்க இப்படி நம்ம பொண்ண வாழ வைக்கிறதுக்கு நம்ம வீட்டிலேயே கௌரவமா வச்சிருந்திருக்கலாம் என்று சொல்ல, இப்படி இந்த உதவியை கேட்டதுக்கு பெரிய குடும்பத்துல கேட்டு இருந்தா பணத்தை கொடுத்து ஆதரவாக இருந்திருப்பாங்களே என்று சொல்லுகிறார். உடனே மனம் மாறிய மணியார் எல்லாத்துக்கும் காரணம் ராஜாங்கம் தான் என்ற உண்மையையும் நடந்த அனைத்து உண்மைகளையும் சொல்லி விடுகிறார். இன்னும் கொஞ்ச நேரத்துல சூர்யாவை எரிக்க திட்டம் போட்டு இருக்காங்க ஊருக்கு வெளியே இருக்கிற குடோன்ல தான் கட்டி போட்டு இருக்காங்க என்று சொல்ல உடனே நந்தினி ஆனந்தி அன்பு மூவரும் அங்கிருந்து கிளம்பி குடோனுக்கு வர மறு பக்கம் ராஜாங்கம் சூர்யாவை கொளுத்த தீப்பந்தம் எடுத்துக் கொள்கிறார். என் தம்பிக்கு கொல்லி போட்ட மாதிரி உனக்கு போட போகிறேன் என்று சொல்லி பக்கத்தில் போக அன்பு கட்டையை தூக்கி எரிகிறார். உடனே அங்கு இருப்பவர்களை அன்பு அடிக்க நந்தினியும் ஆனந்தியும் சூர்யாவை காப்பாற்ற பிறகு அனைவரும் சண்டை போட, நந்தினியும் ஆனந்தியும் பரமு தப்பிக்க விடாமல் பிடிக்கின்றனர்.
கொஞ்ச நேரத்தில் போலீஸ் வந்துவிட, நீங்க ஏன் சார் அடிக்கல என்று சூர்யா கேட்க என்ன மயக்கமாக்கி கட்டிப்போட்டு அடிச்சாங்க என்று சொல்ல உடனே அன்பு மற்றும் நந்தினி இருவரும் இவர கடத்தி வைத்து கொலை பண்ண பார்த்தாங்க என்று சொல்ல கொலை பண்ண பாக்கல நந்தினி கொலையே பண்ணியிருக்காங்க என்று சொல்லி வீராவை கொலை பண்ணதும் இவங்கதான் என்ற உண்மையை சொல்லுகிறார். உடனே போலீஸ் உன் பொண்டாட்டி தான் வீராவை கொன்னலா என்று கேட்க, இல்ல இல்ல நான் தான் *லை பண்ணேன் பரமுக்கு இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லுகிறார். பிறகு போலீஸ் அவர்களை இழுத்து சென்று விட, நீங்க எப்படி இங்க வந்தீங்க என்று கேட்க, அதெல்லாம் பெரிய கதை ஊருக்கு போகும்போது பேசிக்கலாம் வாங்க என்று சொல்ல ஆனந்தியும்,அன்பு சென்றுவிட சூரியா நீ என்கிட்ட என்னமோ சொல்லணும்னு நெனச்சியே என்ன அளந்து என்று கேட்க அதை அப்புறம் சொல்றேன் என சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார்.
மறுநாள் காலையில் கோவிலில் பெரிய குடும்பத்திற்கு மாலை மரியாதை செய்து, ராஜாங்கம் பண்ண தப்புக்காக நாங்க மன்னிப்பு கேட்கிறோம் என்று சொல்ல, தேவையில்லாமல் ஈகோ பார்த்து அவரைப் ஜெயில்ல போயிருக்காரு என்று சொல்லுகிறார். நந்தினி இப்போ ராஜாங்கத்தை பத்தி எதுக்கு பேசிக்கிட்டு இரண்டு குடும்பமும் சேர்ந்து கிரீடம் வைக்க வந்திருக்கும் அதை மட்டும் பண்ணலாம் என்று சொல்ல நந்தினி சொல்றது தான் சரி என்று சூர்யா சொல்ல அருணாச்சலம் இந்த முறை சுந்தரவள்ளியும் பார்வதியும் சேர்ந்து கிரீடத்தை வைக்கட்டும் என்று சொல்ல, அதேபோல் சுந்தரவல்லி நாங்களும் ஒரு முடிவெடுத்து இருக்கோம் இந்த வாட்டி முத்துமாலை அம்மன் கழுத்துல இருக்கட்டும் அடுத்த வருடம் இரண்டு முத்துமாலை வரும் அப்போ ஆளுக்கு ஒன்னு ஒன்னு வாங்கிக்கிறோம் என்று சொல்லி பார்வதியும் சுந்தரவள்ளியும் சேர்ந்து முதலில் முத்து மாலையை அம்மன் கழுத்தில் போட்டு பிறகு இருவரும் சேர்ந்து கிரீடத்தை வைக்க பூஜையும் நடந்து முடிகிறது. உடனே அருணாச்சலம் திருவிழா நல்லபடியாக முடிந்தது எதுவா இருந்தாலும் போன் பண்ணுங்க நாங்க கிளம்பறோம் என்று சொல்லி குடும்பத்தினர் கிளம்புகின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி சூர்யா எதிரில் கடத்தப்பட சூரியா அவர்களை காரில் விரட்டி பிடிக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் நந்தினியை அடைத்து வைக்க சூர்யா தேடுகிறார் நந்தினி அவர்களிடம் தப்பிக்க முயற்சி செய்ய சூர்யா நந்தினி காப்பாற்றினாரா?இல்லையா? என்ற பரபரப்பான கதைக்களத்துடன் இனிவரும் எபிசோடுகள் பார்த்து தெரிந்து கொள்வோம்.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…