Kiara Advani's Salary for Toxic Revealed
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி, இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவரது திரைப்பயணமும், தொடர்ந்து உயர்ந்து வரும் சம்பளமும் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் மனைவியான கியாரா, ஆரம்ப காலங்களில் ஒரு படத்திற்கு ரூ.3 முதல் ரூ.4 கோடி வரை சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படத்திற்காக ரூ.5 முதல் ரூ.7 கோடி வரை சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகின.
அதன்பின் வார் 2 படத்தில் அவரது சம்பளம் மேலும் உயர்ந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது யாஷ் நடிக்கும் டாக்சிக் திரைப்படத்திற்காக கியாரா அத்வானி ரூ.15 கோடி சம்பளம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சமீபத்தில் டாக்சிக் படத்தின் ‘தபாஹி’ பாடலில் யாஷுடன் கியாரா நடித்த சில நெருக்கமான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி, ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விவாதங்களுக்கும் வழிவகுத்தன.
டாக்சிக் படத்திற்காக கூறப்படும் இந்த ரூ.15 கோடி சம்பளத்தின் மூலம், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகைகளின் பட்டியலில் கியாரா அத்வானியும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் சமூக வலைதளங்கள் மூலம் கியாரா அத்வானிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…