Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்கியாவை திட்டிய கோபி..பிடிவாதமாக இருக்கும் மயூ..இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiya lakshimi serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோட்டில் கோபி இரவெல்லாம் தூங்காமல் இருக்க பாக்கியா என்ன பிரச்சனை ஏன் இப்படி தூங்காம போனையே அடிக்கடி பார்த்துட்டு இருக்கீங்க? உடம்பு ஏதாவது முடியலையா ஒரு நல்ல டாக்டரா பார்க்கலாமா என அக்கறையோடு விசாரிக்க கோபி நான் அப்படியே செத்துப் போனாலும் உங்களுக்கு இன்சூரன்ஸ் பணம் வரும் நீங்க நடு தெருவுல நிக்க மாட்டீங்க என கூற பாக்கியா நான் என்ன கேட்டா நீங்க என்ன பேசுறீங்க பணத்தை விட எங்களுக்கு நீங்க தான் முக்கியம் என கூறுகிறார்.

பிறகு பாக்கியாவை கேள்வி கேட்காமல் கோபி படுத்து தூங்க சொல்ல பாக்கியமும் அமைதியாக படுத்து விடுகிறார். மறுநாள் காலையில் இனியா ஸ்கூலுக்கு கிளம்ப தயாராக இருக்க கோபி உடம்பு முடியல எழிலை கூட்டிட்டு போய் விட சொல்கிறார். பிறகு ஈஸ்வரி நீ ஏம்பா இப்படி இருக்க உனக்கு என்ன பிரச்சனை உடம்புக்கு ஏதாவது பண்ணுதா? டாக்டர்கிட்ட போகலாம் ஆனா இல்ல பணப்பிரச்சனை ஏதாவது இருந்தா அப்பாவோட பணத்தை எடுத்து செலவு பண்ணிக்க ஊர்ல இருக்க நிலத்தை விட்டு விடலாமா என அக்கறையோடு விசாரிக்க கோபி கண் கலங்குகிறார்.

இந்த பக்கம் ராதிகா கோபி இடம் பேசக்கூடாது என மயூராவிடம் சொல்ல அவர் நான் பேசுவேன் என பிடிவாதமாக கூறுகிறார். அதன்பிறகு ராதிகா வெளியில் சென்றிருந்த நேரத்தில் கோபி வீட்டுக்கு செல்ல அவரை எதுக்கு இங்கே வந்தீங்க என சண்டையிடுகிறார் ராதிகா. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiya lakshimi serial episode update
baakiya lakshimi serial episode update