Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அர்ஜுன் தாஸ் – அதிதி சங்கரின் ‘ஒன்ஸ் மோர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Arjun Das - Aditi Shankar Once More Release Date Announced

அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் இணைந்து நடித்துள்ள காதல் திரைப்படம் ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரபல மலையாள இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ள இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில், படக்குழு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படம் ஆகஸ்ட் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.