தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு.இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளியாகியிருந்தது.
இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.
வெற்றிமாறன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பது இதுவே முதல் முறையாகும் இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க பத்து கோடி முதல் 15 கோடி வரை சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


