தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
சினிமாவைத் தாண்டி கார் பந்தயத்திலும் ஆர்வம் கொண்டுள்ள அஜித், ‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகளில் மீண்டும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தனது சொந்த அணியான ‘அஜித்குமார் ரேசிங்’ மூலம் பல்வேறு சர்வதேச பந்தயத் தொடர்களில் பங்கேற்று வருகிறார்.
அஜித்தின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஆவணப்படம் ‘கிளாடியேட்டர்ஸ் – இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்’. இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
துபாய், அபுதாபி மற்றும் ஐரோப்பிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் தொடர்களான Asian Le Mans, 24H Series உள்ளிட்ட போட்டிகளில் அஜித் பங்கேற்ற முக்கிய தருணங்கள் இந்த ஆவணப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெற்ற நிகழ்வில் அஜித்துக்கு ‘ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது’ வழங்கப்பட்ட தருணங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படத்தின் சிறப்பு டிரெய்லர் இன்று மாலை 6.40 மணிக்கு வெளியானது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்வு செய்யப்பட்ட முக்கிய திரையரங்குகளில் ரசிகர்களுக்காக இந்த டிரெய்லர் திரையிடப்பட்டது.
3 நிமிடங்களுக்கும் அதிகமான நீளம் கொண்ட இந்த டிரெய்லருக்கு மத்திய தணிக்கை வாரியம் U/A 13 சான்றிதழ் வழங்கியுள்ளது.
இதனையடுத்து, சென்னை ரோகிணி திரையரங்கில் ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரெய்லர் திரையிடப்பட்டபோது, இயக்குநர் சிறுத்தை சிவா மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் வருகை தந்தனர். அவர்களுடன் ஏராளமான அஜித் ரசிகர்களும் திரையரங்கில் குவிந்தனர்.
ரசிகர்கள் முன்னிலையில் டிரெய்லர் திரையிடப்பட்ட நிலையில், அஜித்தின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் காட்சிகளை திரையில் கண்ட ரசிகர்கள் உற்சாகமாக ஆரவாரம் செய்து கொண்டாடினர்.
ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் கூட்டணி
இதனிடையே, ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் மீண்டும் இணைந்துள்ளார். அஜித்தின் 64-வது திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ‘டேர்டெவில்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி அஜித்குமார் தயாரித்து வருகிறார்.
#Gladiators – Trailer..💥 Made like an Actual film..⭐ Thala #Ajithkumar‘s Presence always..👌 AK’s Family is also featured in the trailer..🤝 pic.twitter.com/pBzPoaJLmH
— Laxmi Kanth (@iammoviebuff007) September 6, 2026

